187 நாடுகளை சேர்ந்த வீரர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் 44வது ஒலிம்பியாட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இந்த போட்டியிலே கலந்து கொள்ளாமல் கவனத்தை ஈர்த்துள்ளார், இச்சிறுமி. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவி ஷர்வாணிக்கா 7 வயதாகும் இச்சிறுமி செஸ் போட்டி நடைபெறும் இடத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.



 

செஸ் போட்டி நடைபெறும் அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள பெரிய செஸ் போர்டு, பார்வையாளர்கள் கவரும் வகையிலும் விருப்பப்படுபவர்கள் அதில் விளையாடுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் சிறுமி சர்வாணிக்கா விளையாடுவதை பார்க்க சென்ற வெளிநாட்டைச் சேர்ந்த தூதுக்குழு தலைவர் ஒருவர் சிறுமியுடன் விளையாட விருப்பப்பட்டு உள்ளார்.

 


 

 



 

அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் போர்டு காயின் உயரம் கூட இல்லாத சர்வாணிக்கா, அருமையாக நகர்த்தி வெற்றியை தன்வசம் ஆக்கி உள்ளார். வெளிநாட்டவர் ஒருவரை தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஒருவர் வீழ்த்தியது அங்கிருந்த பார்வையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



 

சிறுமி வெற்றியை பெற்றதைப் பார்த்த வெளிநாட்டு நபர் மிகுந்த மகிழ்ச்சியில் சிறுமியை தூக்கி கையில் வைத்துக் கொண்டு நீங்கள் சிறப்பாக விளையாடினார்கள் என பாராட்டுகளை தெரிவித்தார். இதனை அடுத்த சர்வாணிக்கா கூறுகையில், நான் நேஷனல் ப்ளேயராக இருந்து வருகிறேன். சிறிய வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் மற்றும் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என க்யூட்டாக தெரிவித்தார்.