டார்லிங்ஸ் :


ஆல்யா பட் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் டார்லிங்ஸ் . ஆலியா பட், ஷெபாலி ஷா மற்றும் விஜய் வர்மாவுடன் இணைந்து டார்லிங்ஸ் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.Jasmeet K Reen இயக்கிய இயக்கியுள்ள இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்  வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வேலைகளில் தற்போது ஆல்யா இறங்கியுள்ளார்.






அந்த கெமிஸ்ட்ரியில் வீக் :


இந்த நிலையில் பிரபல டிஜிட்டல் ஊடகத்தின் நேர்காணலில் பங்கேற்ற ஆல்யா வேடிக்கையாக சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக கெமிஸ்ட்ரி பாடம் குறித்தான ராபிட் ஃபயர் கேள்வியில் ஆல்யா “எனக்கும் என் கணவருக்கும் ஆன் ஸ்கிரீனில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கிறது. ஆனால் உண்மையில் என் குழந்தைக்கு என்னால் கெமிஸ்ட்ரியில் (வேதியியல் பாடம் ) உதவ முடியாது. ஆனால் இயற்பியல் வேதியலை மேனேஜ் செய்துவிடுவேன்” என பதிலளித்தார். இந்த வேடிக்கையான பதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் ஆல்யா பொது அறிவு கேள்விகள் கேட்கும் பொழுது எப்போதுமே திணறுவது வழக்கம் . இதனை சிலர் க்யூட்டாக பார்த்தாலும் பலர் ட்ரோல் செய்வதும் வழக்கமான ஒன்றுதான்.






முதல் தயாரிப்பு :


ஆல்யா பட் ரன்பீர் கபூரை சில மாதங்களுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் அவர் கர்பிணியாக இருக்கிறார். இது குறித்து அறிவிப்பை அவரே தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். ஆல்யா தற்போது நடித்து முடித்திருக்கும் டார்லிங்ஸ் படத்திற்காக தீவிர புரமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்.  காரணம் ஆல்யா இந்த படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் முதல் முறையாக தயாரிக்கவும் செய்திருக்கிறார்.ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட், மற்றும் ஆல்யாவின் எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து டார்லிங்ஸை தயாரித்திருக்கிறார். இந்த படம் ஒரு டார் காமெடியாக உருவாகியுள்ளது. படத்திலும் ஆல்யா கர்பிணி வேடமிட்டுதான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.