44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவாரூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்


தமிழகத்தில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருப்பதால் அதனை விளம்பரப்படுத்தும் விதமாக தினம் தோறும் மாவட்ட அளவில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர். முன்னதாக நேற்றைய தினம் இதுகுறித்த இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியினையும் தொடங்கி வைத்தார். மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி எதிர்வரும் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்போட்டி நடைபெறவுள்ளது என்பதனை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட அளவில் பல்வேறு விதமான விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 




அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் திருவாரூர் வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, குளிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளி, புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டமானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கிடையேயான செஸ் போட்டியினை மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.  




இதேபோன்று நேற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் சிறுவர்கள் பெரியவர்களுக்கான செஸ் விளையாட்டு மற்றும் பள்ளி அளவில் செஸ் விளையாட்டு போட்டி சைக்கிள் பேரணி ஏந்தி வருதல் உள்ளிட்ட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் இந்நிகழ்வில், மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன், சதுரங்க கழக துணைத்தலைவர் முரளிதரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண