தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த சூர்யாக்களில் இவரும் ஒருவர்.. எஸ்.ஜே. சூர்யா (SJ Surya) என்றாலே இருக்கு ஆனா இல்ல .. இருக்குர மாறி இருக்கு ஆனா இல்ல என்ற டைலாக் நினைவிற்கு வரும். சினிமா துறையில் வாலி, குஷி என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தாலும் எஸ்.ஜே. சூர்யாவின் ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸ் அதையே தூக்கி சாப்பிடும் வகையில் அமைந்திருக்கும்.


இவர் நடித்த அவ்வொரு கதாப்பாத்திரத்திலும் வித்தியாசமான ரோல்களை நடித்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக 2004 ஆம் ஆண்டு  வெளியான நியூ படத்தில் இவர் அறிமுகமாகியிருந்தாலும் அதற்கு முன்பே ”நெத்தியடி”, ”கிழக்கு சீமையிலே”, ”ஆசை” ஆகிய படங்களில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.


 






2005 ஆம் ஆண்டு வெளிவந்த ”அன்பே ஆருயிரே” படத்தில் வரும்  “மயிலிறகே மயிலிறகே” பாடல், அந்த காலகட்டத்தில் இளைஞர்களின் நாவினில் ஒலித்து கொண்டிருக்கும். அதையடுத்து 2007- ல் வெளியான வியாபாரி படத்தில் ”ஆச பட்ட எல்லாத்தையும் காசிருந்தாவாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா” எனும்  பாடல், 2000’ களின் சூப்பர் ஹிட்டான அம்மா செண்டிமெண்ட் சாங்.


கற்பனைக்கு எட்டா கதைகளில், அவரின் நடிப்பால் விசில் சத்தங்களால் திரையரங்குகளை நிறைய வைத்திருக்கிறார் எஸ்.ஜே. இயக்கம் ஒரு புறம் இருக்க, நடிப்பில் ஹீரோ ரோல்களை விட வில்லன் ரோல்களில் வேற லெவலில் பெர்ஃபார்மன்ஸ் செய்வது இவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி..!


இடைப்பட்ட காலத்தில் தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து புலி எனும் படத்தை இயக்கினார்.எஸ்.ஜே.சூர்யா இருக்காரா இல்லையா எனும் சூழல் ஏற்பட, பீனிக்ஸ் பறவையாய் கம்பேக் கொடுத்தார். 2017- ல் வெளிவந்த ஸ்பைடர் படத்தில் இவர் கொடுத்த ரியாக்‌ஷன் சோஷியல் மீடியாக்களில் செம வைரல்.. அப்படிபட்ட வன்மமான வில்லனாகவே மாறியிருப்பார் இவர்.







சமீப வருடங்களில், மெர்சல், மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை மாநாடு, டான் என பட்டய கிளப்பி உள்ளார் எஸ்.ஜே.இவர் நடிப்பில் கடமையை செய், பொம்மை, மார்க் ஆண்டனி, இறவாக்காலம், உயர்ந்த மனிதன் ஆகிய படங்கள் வருங்காலத்தில் வெளியாகவுள்ளது.


தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் 15 ஆவது படத்திலும் இவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.இன்று பிறந்தநாள் காணும் பவர் ஹவுஸ் ஆப் டாலண்ட் - எஸ்.ஜே சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.!