Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாடில் இரட்டை வெண்கலம் வென்ற இந்திய அணிகள்..!

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாடில் இரட்டை வெண்கலம் இந்திய அணி வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில்  இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

Continues below advertisement

Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாடில் இரட்டை வெண்கலம் இந்திய அணி வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில்  இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது இதுவே முதல்முறையாகும்.

Continues below advertisement

செஸ் ஒலிம்பியாடில் ஆடவர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டின் ஆடவர் பிரிவில், விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் ட்ராவும் செய்து 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கப்பதக்கம் வென்றது.

11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும் 1 தோல்வி மற்றும் 1 ட்ரா செய்து 19 புள்ளிகளைப் பெற்ற அர்மீனியா அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

11 போட்டிகளில் விளையாடிய இந்தியா பி அணி 8 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ட்ரா என்ற கணக்கில் 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. 

இந்தியா ஏ அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 1 தோல்வி மற்றும் 3 ட்ரா ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள ப்ரக்ஞானந்தா, குகேஷ், ரௌனக், அதிபன் மற்றும் நிஹல் ஆகியோர் விளையாடினர். 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற குகேஷ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து 9/11 என்ற கணக்கில் அவர் இந்திய அணிக்கு பதக்கத்தை உறுதி செய்தார். ஆனால் இந்திய அணி தங்கம் வெல்ல முடியாமல் போனதற்கு, நான் தான் காரணம் எனவும், குகேஷ் கூறியுள்ளார். 

மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றது. உக்ரைனில் கடந்த 5 மாதங்களாக போர் நடைபெற்று வரும் நிலையிலும், அந்நாடு சார்பாக களமிறங்கிய மகளிர் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. ஜார்ஜியா மகளிர் அணி வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில்  இந்திய மகளிர் அணி பதக்கம் வென்றுள்ளது என்பது இதுவே முதல்முறையாகும்.

இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் தங்கப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் நேற்று மற்றும் இன்றைய தோல்வி காரணமாக இந்திய அணி தங்கப்பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டுள்ளது.


ALSO READ | Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஒலித்த செம்மொழியான தமிழ் மொழி பாடல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola