சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் தனியார் நிறுவனத்தில் ஹவுஸ்கீப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி மைதிலி, இவர் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். ஒப்பந்த அடிப்படையில் மைதிலி பணியாற்றி வருகிறார்.


இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி திருவொற்றியூர் காவல்நிலையத்தில் மணிமாறன் புகார் ஒன்று அளித்தார். அதில், வேலைக்கு சென்ற தனது மனைவி மைதிலியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும்  கேட்டதாக மணிமாறன் கூறியிருந்தார். இதையடுத்து, காணாமல் போன மைதிலியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.




இந்த சூழலில், திருவொற்றியூர் இருந்து மணி செல்லும் பாதையில் புதியதாக கட்டப்பட்டு வந்த பாலத்திற்கு கீழே பழைய துணிகள் கிடந்த துணிக்குவியலில் கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அங்கே சென்று பார்த்தபோது அதில் பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதையடுத்து, துணிக்குவியலுக்குள் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.


பின்னர், அந்த சடலம் மைதிலி என்பதை போலீசார் உறுதி செய்தனர். மைதிலி உயிரிழந்தது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்த போலீசார், மைதிலி கடைசியாக அவருடன் பணியாற்றிய ஜெய்சங்கர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வந்ததை அறிந்தனர். இதையடுத்து, ஜெய்சங்கரை அழைத்து விசாரணை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.


ஜெய்சங்கர் மைதிலியுடன் பணிபுரியும் நபர் என்றும், ஜெய்சங்கர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது மைதிலி லிப்ட் கேட்டு வந்தபோது மணிமாறன் இவர்கள் இருவரையும் பார்த்துள்ளார். தன்னுடைய மனைவி ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் வருவதைப் பார்த்த மணிமாறனுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருசக்கர வாகனத்தை வழிமறித்து இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்தது.




இதையடுத்து, மணிமாறனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மனைவியின் நடத்தை மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டார். பின்னர், திருவொற்றியூரில் இருந்து மணலி செல்வதற்காக கட்டப்பட்டு வந்த பாலத்திற்கு கீழே  மணிமாறனும், மைதிலியும் அமர்ந்து இதுதொடர்பாக பேசியுள்ளளனர்.


அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கே கிடந்த பழைய துணியை எடுத்து மைதிலியின் கழுத்தை மணிமாறன் நெரித்துள்ளார். அதில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைதிலி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, மணிமாறன் அங்கே கிடந்த பழைய துணி மூட்டைக்குள் மனைவியின் சடலத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.


பின்னர், வீட்டிற்கு சென்றுவிட்டு காவல்நிலையத்தில் ஒன்றுமே தெரியாதது போல புகார் அளித்துள்ளார். ஜெய்சங்கரை கொலைச் சதியில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், மணிமாறன் போலீசார் விசாரணையில் செய்த தவறை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண