Chess Olympiad Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா வெற்றிகரமாக நிறைவு
Chess Olympiad 2022 Closing Ceremony LIVE: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்...
44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தற்போது முடிவடைந்தது
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உள்ள ஹங்கேரி நாட்டிடம் இந்தியா செஸ் கொடியை அளித்தது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பரிசளிப்பு விழா நிறைவு பெற்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போர்ட் 3-ல் சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தாவிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில் போர்ட் 4-ல் சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனை தானியா சச்தேவிற்கு வெண்கலப் பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் போர்ட் 5 -யில் சிறப்பாக விளையாடியதற்காக திவ்யா தேஷ்முகிற்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனி நபர் பிரிவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஸ்டைலிஷ் அணியாக டென்மார்க் மகளிர் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஸ்டைலிஷ் அணியாக டென்மார்க் மகளிர் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் உரையாற்றி வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: பறக்கும் பியானோவில் இசைத்து அசத்திய கலைஞர்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வரவேற்பு உரையை தலைமை செயலாளர் இறையன்பு வாசித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் முடிவடைந்துள்ளன.
செஸ் ஒலிம்பியாட் விழாவில் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் படங்கள்..
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் ஆளப்போறன் தமிழன் மற்றும் வெற்றிப்படிக்கட்டு பாடல்கள் ஒலிக்கப்பட்டன
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பாரதியார் பாடல்கள் பறக்கும் பியானோவில் இசைக்கலைஞர் ஒருவரால் இசைக்கப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்ரம்ஸ் வாசித்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவிற்கு முதலமைச்சர் கோட் சூட்டில் மாஸாக வந்தார்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் செம்மொழியான தமிழ் மொழி பாடலை ராஜேஷ் வைத்யா, நவீன், சிவமணி இசைக்குழுவினர் இசைத்து வருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் சிவமணி, நவீன், ராஜேஷ் வைத்யா ஆகியோரின் இசை நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் தனிநபர் பிரிவில் போர்ட் 2வில் அதிகமான புள்ளிகள் பெற்ற நிஹால் சரினிற்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் தனிநபர் பரிசுகளில் போர்ட் 1 அதிக புள்ளிகள் பெற்ற டி.குகேஷிற்கு தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிவமணி, ஸ்டீபன் டேவசி உள்ளிட்டோரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் கடைசி நாள் ஆட்டம்... விறுவிறுப்பாக நடைபெற்ற கடைசி நாள் ஆட்டங்களின் படங்கள்:
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்க வீரர்கள் பேருந்து மூலம் மாமல்லபுரம் பயணம்:
செஸ் ஒலிம்பியாட் மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 2014ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி மீண்டும் இரண்டாவது முறையாக வெண்கலம் வென்று அசத்தியுள்ளது.
கடந்த 28ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
Background
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த 28ஆம் தேதி வண்ணமையான தொடக்க விழாவுடன் தொடங்கியது. தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார். மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு தீவிரமாக செய்துள்ளது. 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் தொடரில்ஆடவர் பிரிவில் உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. மகளிர் பிரிவில் உக்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டின் ஆடவர் பிரிவில், விளையாடிய 11 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் ட்ராவும் செய்து 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த உஸ்பெஸ்கிஸ்தான் அணி தங்கப்பதக்கம் வென்றது.
11 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றியும் 1 தோல்வி மற்றும் 1 ட்ரா செய்து 19 புள்ளிகளைப் பெற்ற அர்மீனியா அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றது.
11 போட்டிகளில் விளையாடிய இந்தியா பி அணி 8 வெற்றி, 1 தோல்வி மற்றும் 2 ட்ரா என்ற கணக்கில் 18 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.
இந்தியா ஏ அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி 1 தோல்வி மற்றும் 3 ட்ரா ஆகியவற்றுடன் 17 புள்ளிகள் பெற்று பட்டியலில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள ப்ரக்ஞானந்தா, குகேஷ், ரௌனக், அதிபன் மற்றும் நிஹல் ஆகியோர் விளையாடினர். 8 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற்ற குகேஷ், நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தார். இதனையடுத்து 9/11 என்ற கணக்கில் அவர் இந்திய அணிக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -