ஷாம் கௌஷல் :


பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலின் தந்தையும் , பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநருமான ஷாம் கௌஷல் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து மனம் திறந்திருக்கிறார். இது பாலிவுட் திரைத்துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் ஷாம் கௌசல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாரா என ஆச்சர்யத்தில் உறைந்திருக்கின்றனர். ஏனென்றால் இதனை அவர் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளவே இல்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு ஷாம் , லடாக்கில்  படப்பிடிப்பு ஒன்றிற்காக சென்று திரும்பியிருக்கிறார். அப்போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதனால் உடனடியாக மும்பையில் உள்ள பிரபல நானாவதி மருத்துவமனைக்கு  சென்று பரிசோதனை செய்திருக்கிறார். ஏற்கனவே அதே மருத்துவமனையில் அவர் அப்பெண்டிக்ஸ் பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.  இதனால் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சையின் பொழுது , நடிகர் நானா படேகர் ஷாம் கௌசல் உடனடிருந்திருக்கிறார். இதனால் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் அவரை அழைத்திருக்கின்றனர். புனேவில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்த நானா உடனடியாக மருத்துவமனை விரைந்திருக்கிறார்.




புற்றுநோய் உறுதி :


நவம்பரில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமான ஷாம் கௌசல் , அக்டோபர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் துவங்க , சுய நினைவின்றி படுத்திருந்த ஷாம் தனக்கு நடந்தவற்றை நினைவு கூர்ந்தார் “ என் வயிற்றில் தொற்று இருந்தது. மருத்துவர்கள் வயிற்றின் பாதிக்கப்பட்ட  ஒரு பகுதியை வெட்டி பரிசோதனைக்கு அனுப்பினர். அது புற்றுநோயாக கண்டறியப்பட்டது. நான் உயிர் பிழைப்பேனா இல்லையா என்பது கூட எனக்கு அப்போது உறுதியாக தெரியவில்லை.” என்றார்.







காத்திருந்த படக்குழு :


புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக 50 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறார் ஷாம் , ஆனால் தனக்கு புற்றுநோய் வந்திருந்தது குறித்து அவர் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளவில்லை. மேலும் ஒருவருடம் அதற்கான தொடர் பரிசோதனையிலும் இருந்திருக்கிறார். சிகிச்சையில் இருந்த பொழுது தனது மனநிலை மிகவும் மோசமானதாக இருந்தது என்கிறார் ஷாம் . “"நான் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தேன். என்னால் அப்படி வாழ முடியாது என்பதால் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து என் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன் என்று கூட முடிவு செய்தேன். ஆனால் என் வயிற்றில் இருந்ததால் என்னால் படுக்கையில் இருந்து இறங்க முடியவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, நான் கடவுளிடம் சொன்னேன், 'தயவுசெய்து இதை முடித்து விடுங்கள், எனக்கு எந்த வருத்தமும் இல்லை, நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தேன், உங்கள் அருளால் நான் நன்றாக வாழ்ந்தேன், நீங்கள் என்னை காப்பாற்ற விரும்பினால், என்னை பலவீனமாக மாற்ற வேண்டாம் “ என வேண்டிக்கொண்டாராம் . நவம்பர் மாதம் ஷாம் கௌசல் ஒப்பந்தமாகியிருந்த திரைப்படம் , பிளாக் ஃபிரைடே . அந்த படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப் , தான் குணமாகி வரும் வரையில் தனக்காக காத்திருந்ததையும் நெகிழ்ச்சியாக நினைவு கூர்ந்தார் ஷாம் கௌசல்