செஸ் ஒலிம்பியாட் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைச் சந்தித்துள்ளார். 5வது சுற்றுப்போட்டியில்  ஸ்பெயின் வீரர் ஜெய்ம்யைச் சந்தித்தார்.  85வது நகர்த்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். 


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று வருகின்றனர். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பியாட் போட்டியில் பிரக்ஞானந்தா  தொடர்ந்து, தடுமாறி வந்தார்.






 


களம் இறங்கிய முதல் போட்டியில் போராடிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற போட்டியில் கூட போட்டியை சமணில் நிலையில் போராடி முடித்து இருந்தார்.இன்று நடைபெற்ற போட்டியில் ஆரம்பம் முதலே  தொடர்ந்து போராடி வந்த நிலையில் இறுதியில் தோல்வியை சந்தித்தார்.  இதற்கு முன்னர்,  இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சுவிட்சர்லாந்து வீரர் யானிக்குடன் மோதினர். இந்த போட்டியில் அவர் கருப்பு நிற காய்களுடன் சுவிட்சர்லாந்து வீரரை எதிர்கொண்டார். 67வது காய் நகர்த்தலில் அவர் சுவிட்சர்லாந்து வீரரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தமிழக வீரர் பிரக்ஞானந்தாவின் பி அணி தான் இந்திய அணிகளிலே மிகவும் பலமிகுந்த அணியாக எதிரணியினரால் கருதப்படுகிறது. பிரக்ஞானந்தா தவிர தமிழக வீரர் குகேஷ், தமிழக வீராங்கனை வைஷாலி, இந்திய வீராங்கனை வந்திதா அகர்வால், தமிழக வீரர் சேதுராமன் ஆகியோரும் அசத்தலான வெற்றியை பெற்றனர். 


இதேபோல், இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய A மகளிர்  அணி வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் அணியை 2.5 - 1.5  என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண