தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தில் வித்தியசமான பொங்கல் வாழ்த்து பகிரப்பட்டுள்ளது. 


தோனி, ரெய்னா என இரண்டு முக்கிய வீரர்களுக்கும் தமிழ்நாட்டின் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ‘தல, சின்ன தல’ என ரசிகர்கள் இந்த கூட்டணியை கொண்டாடுவார்கள். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ரசிகர் பக்கத்தில், தோனி, ரெய்னா குடும்பத்துடன் இருப்பது போன்ற ஒரு ஓவியத்தை பகிர்ந்து பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்திருக்கின்றனர். தோனி, ரெய்னா வேஷ்டி கட்டியிருப்பது போன்றும், குழந்தைகள் பட்டுப்பாவடை கட்டியிருப்பதும் போன்ற வரையப்பட்ட இந்த ஓவியம் சிஎஸ்கே ரசிகர்களிடம் ஹிட் அடித்திருக்கிறது.


எனினும், சமூபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோரை தக்க வைத்தது. தொடக்கத்தில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வந்த ரெய்னா தக்க வைக்கப்படாமல் போனது சின்ன தல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.






மேலும், 2022ஆம் ஐபிஎல் தொடரில் இம்முறை 10 அணிகள் இடம்பெற உள்ளன. இதன்காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக மெகா வீரர்கள் ஏலமும் நடைபெற உள்ளது. அந்த ஏலம் அடுத்த மாதம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருக்கும் பட்சத்தில் அடுத்து ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்று பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இம்முறை ஐபிஎல் தொடரை யுஏஇயில் இல்லாமல் தென்னாப்பிரிக்காவில் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 



மேலும் படிக்க : Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண