தைத் திருநாள் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இயக்குனரும், பாடல் ஆசிரியருமான விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் சமீபத்தில் துபாய் புர்ஜ் கலீபாவில் ஆங்கில புத்தாண்டை கொண்டாடினர். அங்கிருந்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்து வீடியோ  இணையத்தில் வைரலானது. 


அதனை அடுத்து,  பொங்கல் திருநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளை பதிவிட்டிருக்கிறார். இம்முறை சோலோவாக வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோவிலுக்குச் சென்றிருக்கும் அவர், அங்கிருந்து பொங்கல் வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். ”அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள், சபரிமலையில் இருந்து அனைவருக்கும் பிரார்த்தனைகளும், நல்லதும் நடக்க வேண்டுமென வேண்டி கொள்கிறேன். சுவாமியே சரணம்” என பதிவிட்டுள்ளார்.


மேலும் படிக்க: Rajinikanth Pongal Wishes | "ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது" : சூப்பர் ஸ்டாரின் பவர்ஃபுல்லான பொங்கல் வாழ்த்து..






விக்னேஷ் சிவன் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை இயக்கியுள்ளார். படம் வருகிற பிப்ரவரி மாதம் , காதலர் தினைத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.


மேலும் படிக்க : Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண