அரபு அமீரகத்தில் நடைபெற்ற கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தோனி தலைமையிலான சென்னை அணி புள்ளிப் பட்டியலில் பின்தங்கி தொடரை விட்டு வெளியேறியது.    ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில் கேப்டன் தோனியை  வெற்றிகரமாக வழியனுப்பி வைக்க சென்னை அணி நிர்வாகம் தீர்மானமாக உள்ளது.

கடந்த முறை அணியில் இருந்து விலகிய ரெய்னா அணியில் இணைந்துள்ளது சென்னை அணிக்கு சாதகமான ஒரு அம்சம். ஹர்பஜன் சிங், வாட்சன் இல்லாத நிலையில் ஷார்துல் தக்கூர், மொயின் அலி போன்ற வீரர்கள் மீது தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் இந்த தொடரில் தோனியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என எதிர்பார்க்கலாம். இது தவிர ராபின் உத்தப்பா, புஜாரா மாதிரியான மூத்த வீரர்களும் அணிக்கு பங்களிப்பை தருவதற்காக காத்திருக்கின்றனர்.

Ulla vandha power adiii! #Thala 💪 #WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/MUXqtMKkBL
— Chennai Super Kings (@ChennaiIPL) April 10, 2021

டெல்லி அணியைப் பொறுத்தமட்டில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியது அந்த அணிக்கு நிச்சயம் பின்னடைவே. புதிதாக கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள பந்த், மூத்த வீரர்களான ரஹானா, அஸ்வின் ஆகியோர் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய ஜாம்பாவான் ஸ்மித் அணியில் இணைந்திருப்பது மிடில் ஆர்டரில் டெல்லிக்கு வலு சேர்க்கக்கூடும். ஆட்டம் மும்பையில் நடைபெற உள்ளதால் மண்ணின் மைந்தர் பிரித்வி ஷா மீது எல்லாருடைய கவனமும் திரும்பியுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் நோக்கியா, ரபாடா இல்லாத நிலையில் யார் அவர்களின் இடத்தை நிரப்ப போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் டாஸ் வெல்லும் அணி பீல்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனி ஃபார்முக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்தப் போட்டியை பொறுத்தவரைக்கும் entah அணியின் துவக்க ஜோடி சிறப்பாக செயல்படுகிறதோ, அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கலாம். T20 போட்டிகளில் நிரந்தர இடமில்லாமல் தவிக்கும் தவான், இந்த வாய்ப்பை பயன்படுத்தி அணியின் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்த போராடுவார்.

மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:

சாம் கர்ரன்
மொயின் அலி
சுரேஷ் ரெய்னா
பிரித்வி ஷா
அஸ்வின்
ரிஷப் பந்த்