இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக இருப்பவர், மோகன் பகவத். 71 வயதான மோகன் பகவத், கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி, இருமல் அவருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.




இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், மோகன் பகவத்துக்கு இதுவரை இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.