ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடும் செரீனா வில்லியம்ஸ். 24வது முறை விம்பிள்டன் பதக்கத்தினை வெல்வாரா என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்க்கின்றனர்.
விம்பிள்டன் என்பது ஒரு கிராமம். விம்பிள்டன் போட்டி முதலில் 1877-ம் ஆண்டு, 22 வியாபார நோக்கமில்லாத பயிற்சி பெற்று வந்த டென்னிஸ் வீரர்களுடன் துவக்கப்பட்டது. இதில் முதலில் வென்றவர் ஸ்பென்சர் கோர்.
விம்பிள்டன் போட்டிகள் நடத்த உதவும் ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் மற்றும் க்ராகெட் கிளப் - 23 ஜூலை, 1868-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த கிளப் தான் விம்பிள்டன் போட்டிகளை நடத்துகிறது. தற்போது இந்த கிளப் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
டென்னிஸ் உலகின் ராணியாக இருப்பவர் செரீனா வில்லியம்ஸ். இவர் இதுவரை
ஒற்றையர் பிரிவில் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும், இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும், கலப்பு இரட்டையர் பிரிவில் 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றும் சாதனை படைத்துள்ளார். 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற போது இவர் சுமார் எட்டு முதல் ஒன்பது வார கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் மற்றவர்கள் இவரை போல சாதிப்பார்களா என்பதற்கு இவர் மட்டும் தான் இப்போதைக்கு பதில். இவரின் தன்னம்பிக்கை மற்றும் போராடும் குணம், வெற்றி என்ற ஒன்றுக்காக ரிஸ்க் எடுத்து கடின உழைப்பை கொடுத்தால் வெற்றிக்கனி நம்மை தேடி வரும் என்பதற்கு முழு உதாரணமாகவும் தன்னம்பிக்கையின் உருவமாகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக எந்த ஒற்றையர் பிரிவு போட்டியிலும் கலந்து கொள்ளாத செரீனா வில்லியம்ஸ், இந்த ஆண்டு நடக்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் செரீனா போட்டியிட உள்ளார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். காயம் கரணமாக விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
இதன் பிறகு வேறு எந்த போட்டியிலும் செரீனா பங்கேற்கவில்லை. இதனால் உலக டென்னிஸ் தரவரிசையில் 1024வது இடத்திற்கு வந்துள்ளார். அண்மையில் நடந்த ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடினார். மீண்டும் தனது விளையாட்டினை தொடங்கவுள்ள செரீனாவிற்கு சக வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்