ஆஸ்திரேலிய ஓபன்:


ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் போபண்ணா - எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியானது ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ரோகன் போபண்ணா, மேட் எப்டன் ஜோடி எதிரணி வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். இதனால், எதிரணி வீரர்களால் ஒரு செட்டை கூட தனதாக்க முடியவில்லை. இதையடுத்து, மாக்சிமோ கோன்சாலஸ் மற்றும் ஆண்ட்ரெஸ் மோல்டெனி ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.


 


முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம்:






இதன் மூலம் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறினார்கள். மேலும், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி உலக தரவரிசையில் முதலிடத்தை எட்டியது. இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி- இத்தாலியின் சைமன் பொலேலி, ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் இன்று  மோதியது.


 






இதில் போபண்ணா ஜோடி 7-6 (7-0), 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இரட்டையர் பிரிவில் போபண்ணா முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெறுவது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: IND vs ENG Test: ஆதிக்கம் செலுத்த நினைத்த இந்திய பவுலர்கள்; டஃப் கொடுத்த போப் சதம்; இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை


 


மேலும் படிக்க:India vs England 1st Test: இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட்... எங்கு எப்படி பார்ப்பது? ப்ளேயிங் லெவன் என்ன? - விவரம்