நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை மற்றும் தென்காசி தொகுதிக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெயர் விபரங்களை அறிவித்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.


நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி தென்காசி மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று பாளையங்கோட்டை எல்எஸ் மகாலில் வைத்து வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கு பா.சத்யா, மற்றும் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு மயிலராஜன் ஆகிய இருவரையும்நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.


இந்த ஆண்டு தொடக்கம் முதலே நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றன. இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில கட்சிகள் எப்போது யாருடன் கூட்டணி வைக்கும், தொகுதி பங்கீடு எவ்வளவு என்ற விவரங்கள் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து தெரியவரும். 


இந்தநிலையில் திருநெல்வேலி, தென்காசி நாடாளுமன்ற தொகுதிகளில் நாம்  தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பா. சத்யாவும், தென்காசி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. 


முன்னதாக, கடந்த வாரம் தென் சென்னை தொகுதியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வி நாம் தமிழ் கட்சி சார்பாக போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 3 இடங்கள் அறிவிக்கப்பட்டநிலையில் மீதமுள்ள 37 தொகுதி வேட்பாளர்கள் விரைவி அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. 




 பா. சத்யா கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு  49,898 வாக்குகள் உடன் நான்காவது இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது