நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்தபாபு பல்வேறு தமிழ் தெலுங்கு படங்களில் நடித்தவர். சேரன் பாண்டியன், புதுவசந்தம் தொடங்கி சூரியாவின் ஆதவன் வரை பல சூப்பர் ஹிட் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.அண்மையில் அவர் அளித்த பேட்டியில் இருந்து..
“சிவாஜி சாருடன் பந்தம் அப்படின்னு ஒரு படத்தில் நடிச்சேன். அடிக்க சொன்னா உண்மையாவே அடிப்பாருனு அப்பா எனக்கு சொல்லி அனுப்பியிருந்தாரு. படத்தில் சாரின் பொண்ணுகிட்ட நான் பிரச்னை செய்யறதா காட்சி. அவர் என்னை கன்னத்தில் அறைகிற சீன். நான் பயந்துகொண்டு ஹைதராபாத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் எங்களுக்குக் கொடுத்த அறையில் போய் நுழைஞ்சிட்டேன். பாலாஜி சார்தான் திருமப என்னைக் கூட்டிட்டு வந்தாரு. சிவாஜி சார் என்னிடம் உங்க அப்பா என்னைப் பத்தி இதையெல்லாம் சொல்லியிருக்காரானு நக்கலாகக் கேட்டாரு” என்றார்.
திரையுலகத்தில் தனக்கு நெருக்கமான மறைந்த நடிகர்கள் ரகுவரன் மற்றும் முரளி குறித்துப் பேசிய அவர்,”ரகுவரனுக்குக் கோபமே வராது ஆனால் முரளிக்கு அத்தனைக் கோபம் வரும் மிகவும் தைரியசாலி. புதுவசந்தம் பட சூட்டிங்கில் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. சூட்டிங் தினமும் லேட்டாதான் தொடங்கும். கோபப்பட்டு தன்னுடைய ரூமுக்குப் போனவன் மூன்று நாளா வரவே இல்லை. அப்புறம் நானும் கே.எஸ்.ரவிக்குமாரும் தான் போய் கூட்டிட்டு வந்தோம்.” என்றார்.
பழம்பெரும் நடிகரான நாகேஷின் மகன்தான் ஆனந்த் பாபு. 80- களின் சில படங்களில் கதாநாயகனாகவும் , சில படங்களில் இரண்டாம் நிலை ஹீரோவாகவும் நடித்து கலக்கியவர். நடனத்தின் தந்தை பேர் சொல்லும் பிள்ளையாக விளங்கிய ஆனந்த் பாபு , அந்த காலக்கட்டத்தில் தனக்கென தனி நடன பாணியையே வைத்திருந்தார். சில காலங்கள் மட்டுமே நடித்த ஆனந்த் பாபு, சினிமாவில் அப்பா நாகேஷ் அளவிற்கு கோலோச்ச முடியவில்லை. ஆனந்த் பாபு 24 மணிநேரமும் குடிபோதையில் இருப்பதாகவும் ,மன நலம் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து மனம் திறந்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு .
அதில் “வேலூரில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மனநிலை பாதிக்கப்பட்டிருந்தேன் அப்படின்னு எழுதினாங்க. ஃபோட்டோகிராஃபர்ஸ் , பத்திரிக்கையாளர்களை நான் தப்பு சொல்லவில்லை. ஆனால் எழுதுவதற்கு முன்னதாக என்ன உண்மை அப்படிங்குறத தெரிந்து எழுதணும். உண்மையில் அன்னைக்கு என்ன நடந்தது அப்படீன்னா, எனது நண்பர் அவர் ஒரு மருத்துவர், என் கூட படித்தவர், அவரை பார்க்க போயித்தான் , இப்படி எழுதிட்டாங்க. உண்மை என்ன என்பது குறித்து என்னிடம் கேட்டிருக்கலாம். எல்லாம் எழுதிவிட்டு என்னிடம் வந்து கேட்பது சரியா ? அதை முன்னதாகவே செய்திருக்கலாமே ! எவ்வளவோ செய்திகள் வருது! நிறைய பேர் குடித்துவிட்டு , விபத்தைக்கூட ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியாக செய்ததாக எந்தவொரு ஆவணங்களும் கிடையாது. நான் குடிப்பேன். அது தனிப்பட்ட விஷயம். ஆனால் அதை ஏன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீங்கன்னு நான் கேட்கவில்லை. நான் அளவாக குடித்துவிட்டு , வீட்டில் படுத்து தூங்குகிறேன்.
வெளியில் விழுந்து கிடந்தேனா? ஃபோட்டோ எடுத்து போட்டுருக்கீங்களா ?அதை ஏன் 24 மணிநேரமும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கார் அப்படின்னு எழுதணும்.அதேபோல நான் உயிரோடு இருக்கும் பொழுதே , இறந்துவிட்டதாக எழுதுறாங்க. அது எப்படினா ஒரு மனிதன் எப்போது சாவான்னு கழுகு சுத்திட்டே இருக்கும். அது போல இருந்துடாதீங்க. என்னென்னவோ போடுருக்காங்க. என் குடும்பத்தினரிடம் இதையெல்லாம் கண்டுக்காதீங்கனு சொல்லிட்டேன். நான் இறந்து போயிட்டேன்னு செய்தி வெளியானது நான் சிரிச்சுட்டேன். நான் அவங்களை தொடர்புகொண்டு பேசவில்லை . நான் தரம் தாழ்ந்த மனிதர்களுடன் பேசுவதில்லை. இதை சொல்லும் பொழுது என் அப்பா நியாபகம் வருது. என் அப்பா மகளிர் மட்டும் படத்துல அச்சு அசலா இறந்தவர் போல நடித்தார். அதற்கு சிவாஜி சார் கூட கால் பண்ணி பாராட்டியிருந்தார்” என தன்னை குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார் ஆனந்த் பாபு.