ஃபின்லாந்து நாட்டில் 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் 94 வயதான பக்வானி தேவி தாகர் பங்கேற்றார். அவர் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 


இவர் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்றார். அந்தப் பந்தய தூரத்தை இவர் 24.74 விநாடிகளில் கடந்து அசத்தினார். அத்துடன் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். அதன்பின்னர் இவர் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார். 






மேலும் இவர் ஈட்டி எறிதல் போட்டியிலும் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் இவர் ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்பாக இவர் சென்னையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். 






94 வயதில் இவர் 3 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ள பக்வானி தேவி தாகருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர். இவருக்கு பல்வேறு நபர்களும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இவரை பாராட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருந்தார். உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்தாண்டு பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண