கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி மோதவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது போட்டியின் முழு அட்டவணை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகள்:
செப்டம்பர் 19 - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
செப்டம்பர் 24 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ச் பெங்களூர்
செப்டம்பர் 26 - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
செப்டம்பர் 30 - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
அக்டோபர் 2 - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்
அக்டோபர் 4 - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ்
அக்டோபர் 7 - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் பலப்பரிட்சை நடத்துகின்றன. தகுதி 1 அக்டோபர் 10 ம் தேதியும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியும், அக்டோபர் 13 ஆம் தேதி தகுதி 2 ஆட்டமும் விளையாடும். இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘செப்டம்பர் 19 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது. தகுதி 1 மற்றும் 2 அக்டோபர் 10 மற்றும் 13 ஆம் தேதிகளிலும், எலிமினேட்டர் அக்டோபர் 11 ஆம் தேதியிலும் நடைபெறுகிறது. மீதமுள்ள விளையாட்டுகளின் முழு அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா, இந்தியன் பிரீமியர் லீக்கின் குறிப்பிடத்தக்க பயணத்தை மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எடுத்துச் செல்வதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். மேலும், ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலாச்சார, இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் காலித் அல் ஸாரூனியை ஷா சந்தித்தார்.
பி.சி.சி.ஐ செயலாளர் அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு, ‘ஐபிஎல் தொடரின் குறிப்பிடத்தக்க பயணத்தை மீண்டும் யுஏஇக்கு எடுத்துச் செல்கிறோம். ஹெச்.ஈ. ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான் & காலித் அல் ஸரூனி ஆகியோருக்கு நன்றி’ எனப் பதிவிட்டிருந்தார்.