பரோட் ரஞ்சி டிராபி 2019 -20 சீசனில் சவுராஷ்ட்ரா அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த வருட ரஞ்சி டிராஃபி இறுதிப் போட்டியில் அரை சதம் அடித்திருந்தார். 29 வயதான அவர் சவுராஷ்டிராவுக்காக 21 ரஞ்சி கோப்பை போட்டிகள், 17 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 11 டி 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சையத் முஷ்டாக் அலி ட்ராஃபியில் 53 பந்துகளில் 122 ரன்களை அடித்தார். விரைவில் ஐபிஎல் மற்றும் இன்டர்நேஷனல் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்க பட்ட அவி பரோட் சிறிய வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல விளையாட்டு வீரர்கள் சமீப வருடங்களில் மாரடைப்பு மூலம் சிறு வயதில் இறப்பதை அதிகம் காண முடிகிறது. இது குறித்து பலரும் வெளிப்படை தன்மையுடன் பேசி வருகின்றனர். விளையாட்டு வீரர்களின் மன அழுத்தம் குறித்து சானியா மிர்சாவும் குறிப்பிட்டிருக்கிறார். இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தொடர் விளையாட்டுகளில் இருந்து இடையில் பிரேக் எடுத்து கொள்கிறார். அது போன்று தற்போதைய சூழல் விளையாட்டு வீரர்களின் மனநலம் காக்கும் இடத்தில் நிற்கிறது.



வெளி உலகிற்கு நன்கு அறியப்பட்ட ஸ்டார் வீரர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தால் மீண்டும் அணியில் அதிக எதிர்பார்புடன் விளையாட வர முடிகிறது. ஆனால் வளர்ந்து வரும் அவி பரோட் போன்ற வீரர்களுக்கு அப்படி வாய்ப்பதில்லை. அவர்கள் தொடர்ந்து தன் உடலின் மீதான அழுத்தத்தையும், ஆட்டத்தின் மீதான அழுத்தத்தையும் கவனத்தில் கொண்டு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்வதில் ஏற்படும் அழுத்தம் தான் அவி பரோட் போன்ற வீரர்களின் மரணத்திற்கு காரணமாக அமைகிறது. "எங்கள் இதயங்களில் ரத்தம் கசிகிறது, மிகச்சிறந்த வீரராக மிகவும் உன்னதமான மனிதராக திகழ்ந்த அவி பரோட் இனி எங்களுடன் இல்லை. இது மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. அவரது உன்னத ஆத்மா கருணையுள்ள சர்வவல்லவரின் பாதுகாப்பில் இருக்கட்டும்.” என்று சவுராஷ்ட்ரா கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.



"அவியின் சோகமான மரணத்தைப் பற்றி அறிந்து கொள்வது முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகவும் வேதனையாகவும் இருக்கிறது. அவர் ஒரு சிறந்த கேப்டன். மிகச்சிறந்த கிரிக்கெட் திறன்களைக் கொண்டிருந்தவர். அவர் சமீபத்தில் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார். அவர் நட்பாக பழக்கக்கூடிய உன்னதமான மனிதர். இந்த செய்தியைப் கேட்ட பிறகு சவுராஷ்டிரா கிரிக்கெட் கிளப்பில் உள்ள அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம்,” என்று முன்னாள் சவுராஷ்டிரா கேப்டனும் சவுராஷ்டிரா கிரிக்கெட் கிளப் தலைவருமான ஜெய்தேவ் ஷா கூறினார். மேலும் அவி பரோட்டின் மரணம் குறித்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.