தீபாவளி பண்டிகைக்கு நாடே தயாராகி வருகிறது. இன்னும் சில நாட்களில் மக்களை மகிழ்விக்க தீபாவளி வரவுள்ளது. இதனை முன்னிட்டு இப்போதில் இருந்து பல நிறுவனங்கள் தீபாவளி ஆஃபர்களை அள்ளி வீசத் தொடங்கி இருக்கின்றனர்.


இந்த பண்டிகை காலத்தை நீங்கள் மேலும் சிறப்பானதாக மாற்ற உங்கள் வீட்டை புணரமைக்கலாம். அல்லது புதிய பொருட்களை வாங்கி வீட்டை அலங்கரிக்கலாம். அல்லது பண்டிகைகால விடுமுறையை மகிழ்வுடன் கழிக்க குடும்பத்துடன் பிடித்த ஊர்களுக்கு சுற்றுலா செல்லலாம். புதிதாக கார்களை வாங்கலாம். இன்னும் விருப்பமான பல விசயங்களை தீபாவளி என்ற பாஸிட்டிவ் வைப்சுடன் நீங்கள் செய்து பண்டிகை கால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம்.


ஆனால், இது அனைத்துக்கும் அடிப்படையானது பணம். பெரிய தொகை தேவைப்பட்டால் உடனடி லோனுக்கு பதிவு செய்யலாம். தீபாவளியை முன்னிட்டு பல நிதி நிறுவனங்கள், வங்கிகள் தனிநபர் கடன்களை குறைந்த வட்டி விகிதத்துடன் வழங்கி வருகிறார்கள். இந்த நேரத்தில் நீங்கள் அதை சுலபமாக பெற முடியும். EMI கால்குலேட்டர் மூலம் கணக்கிட்டு உங்களுக்கு தேவையான, உங்களால் செலுத்த முடிந்த கடன் திட்டம் எதுவென அறிந்து அதில் இணையலாம். தனிநபர் கடன் மூலம் பெரிய அளவிலான பொருட்களை வாங்குவது எப்படி? என்பது குறித்து விரிவாக காண்போம்.



25 லட்சம் ரூபாய் வரை அதிகபட்சமாக தனிநபர் கடனை  பெற முடியும். இந்த தீபாவளி சீசனில் நீங்கள் புதிய எலக்டிரானிக் கருவிகள், வீட்டு உபகரணப் பொருட்கள், பெயிண்டிங், உள்கட்டமைப்பு, வெளிப்புற வேலைபாடுகள் போன்ற உங்கள் வீட்டுக்கான எந்த மறு சீரமைப்பு பணிகளை நீங்கள் செய்ய இருந்தாலும், அதை இந்த கடன் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம். தனிநபர் கடன்கள் உங்களுக்கு கிடைக்குமா என நீங்கள் வருந்த தேவையில்லை. இந்த பண்டிகை காலத்தில் ஆன்லைன் மூலமாகவே லோன் பெற விண்ணப்பிக்கலாம்.


இதற்காக நீங்கள் அதிகளவிலான ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. உங்கள் வருமானம் மற்றும் சிபிஸ் ஸ்கோரின் அடிப்படையில் எவ்வளவு தனி நபர் கடன் வழங்குவது என்பது குறித்து நீங்கள் நாடு நிதி நிறுவனம் முடிவு செய்யும். Personal loan eligibility calculator பல நிதி நிறுவனங்கள் இணையதளத்தில் உள்ளன. இதில் நீங்கள் கணக்கிட்டு உங்களுக்கு தேவையான அளவு கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.


மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி செலவு, எதிர்பாராத பயணங்கள், திருமணம், வீடு சீரமைப்பு பணிகள் போன்ற அவசர தேவைகளுக்கு உடனடியாக கடன் பெற முடியும். கடன் பெறும் நீங்கள் எத்தனை ஆண்டுகளில் அதை திருப்பி செலுத்த இருக்கிறீர்கள், மாதம் எவ்வளவு பணம் செலுத்த உள்ளீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம். 5 ஆண்டுகள் வரை நிதிநிறுவனங்கள் கடனை திருப்பி செலுத்த உங்களுக்கு அவகாசம் தருகின்றன. அதன் இணையதளத்தில் நீங்களே சென்று அதை பதிவு செய்யலாம்.


Bajaj Finserv Personal Loan செயலியை பதவிறக்கம் செய்து மேற்கண்ட காரணங்களுக்காக நீங்கள் கடன் பெறலாம். அதில் உள்ள FLEXY திட்டத்தின் மூலம் 45% EMI தொகையை உங்களால் குறைக்க முடியும்.