2022 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் ஜோடி தோல்வியை சந்தித்துள்ளது.


ஆஸ்திரேலியாவின் ஜேசன் குப்ளர், ஜாமிர் ஃபோர்லிஸ் ஜோடியை எதிர்த்து விளையாடினர் சானியா - ராஜீவ் ஜோடி. இந்த போட்டியில், 4-6, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் சானியா - ராஜீவ் தோல்வியடைந்து ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து வெளியேறி உள்ளனர்.






உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரும், இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவருமானவர் சானியா மிர்சா. 35 வயதான சானியா மிர்சா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.


மகளிர் இரட்டையர் பிரிவின் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான சானியா மிர்சா தனது புதிய ஜோடியான உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நாடியா கிச்சோனோக்குடன் இணைந்து 2022 ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாடினார். இந்த ஜோடி, ஸ்லோவேனியாவின் டமாரா ஜிடன்செக் மற்றும் காஜா சுவான் ஜோடியை எதிர்த்து இன்று விளையாடினர். சுமார் 1 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் சானியா மிர்சா இணை தோல்வியடைந்தது.


இந்த தோல்விக்கு பிறகு சானியா மிர்சா நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அறிவித்தார். “எனது உடல் ஒத்துழைக்கும் விதத்தை பார்க்கும்போது, என்னால் சீசனை முடிக்க முடியாது என்று நினைக்கிறேன். நான் இந்த முழு சீசனையும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்தாண்டு மட்டும் 9 தொடர்கள் விளையாடினேன். நான் ஒன்றை மட்டும் உறுதியுடன் சொல்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி சீசனாக இருக்கப் போகிறது.” என தெரிவித்திருந்தார்.


2004-ம் ஆண்டு முதல் டென்னிஸ் விளையாடி வருகிறார் சானியா மிர்சா. அவர் ஓய்வு அறிவித்திருக்கும் நேரத்தில், தோல்விகளோடு அவரது 18 ஆண்டுக்கால பயணம் முடிய இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண