உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக வலம் வருபவர் ஜோகோவிச். இவரது விவகாரம் தற்போது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து வருகிறது. ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க தடுப்பூசி செலுத்தாமல் சென்ற ஜோகோவிச்சின் விசா ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக அவரது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்துள்ளது.




போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லையென்று கூறி  அவரது விசாவை ரத்து செய்வதாக அந்த நாட்டு குடியுரிமை அமைச்சர் அலெக்ஸ் ஹாவே தகவல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், கள நடுவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆனால், ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. மருத்துவ காரணங்களுக்காகவே அவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்தார். ஆனாலும், அவரது விளக்கத்தை ஏற்காத ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்து, அவர் தங்கிய ஓட்டலிலே சிறை வைத்தது. அந்த நாட்டு அரசின் முடிவை எதிர்த்து ஜோகோவிச் மெல்போர்ன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.




ஜோகோவிச்சிற்கு ஆதரவாக செர்பியா மக்களும், ஜோகோவிச்சின் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜோகோவிச் விசாவை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்த மெல்போர்ன் நீதிமன்றம், அவரை ஆஸ்திரேலிய தடுப்பு காவல்மைய ஓட்டலில் இருந்து விடுவிக்கவும் உத்தரவிட்டது. ஜோகோவிச் ஆஸ்திரேலியா ஓபனில் மீண்டும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது விசாவை மீண்டும் ரத்து செய்திருப்பதால் அவர் இந்த தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


உலகிலேயே அதிக கிராண்ட்ஸ்லாம் வாங்கிய வீரர் என்ற சாதனையை ரோஜர் பெடரர், ரபேல் நடாலுடன் ஜோகோவிச் இணைந்து பகிர்ந்துகொண்டு முதலிடத்தில் உள்ளார்.  ஆண்டின் முதல் கிராண்டஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் பங்கேற்று, இந்த பட்டத்தை வென்று பெடரர் - நடாலின் நீண்ட நாள் சாதனையை முறியடிக்கும் கனவில் ஜோகோவிச் இருந்தார். ஆனால், ஆஸ்திரேலிய அரசு அவரது விசாவை ரத்து செய்ததால் அவரது இந்த வாய்ப்பு பறிபோகியுள்ளது. 




கடந்தாண்டே ஜோகோவிச்  இந்த சாதனையை படைக்க வேண்டியது. ஆனால், அமெரிக்கா ஓபன் இறுதிப்போட்டியில் அவர் தோற்றதால் அவரால் கடந்தாண்டு அந்த சாதனையை அவரால் படைக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டில் நான்கில் மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  


 


மேலும் படிக்க : Watch Avaniyapuram Jallikattu LIVE: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலை: இடைவெளி இல்லாமல் HD தரத்தில் ABP நாடு Live-இல் பார்க்கலாம்....


மேலும் படிக்க : Virat Kohli Controversy: ஸ்டம்ப் மைக்கில் ஆவேசமாக பேசிய கோலி.. அதிரடியாக குவியும் கண்டனங்கள்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண