ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் இந்த ஆண்டிற்கான முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தரவரிசையில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவைச் சேர்ந்த னியல் மெத்வதேவ் , தர வரிசையில் 4-ம் நிலை வீரரான இத்தாலியைச் சேர்ந்த ஜன்னிக் சின்னர் உடன் மோதினார்.
சாம்பியன் சின்னர்:
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களை 6-3, 6-3 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். இதையடுத்து சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் அடுத்த மூன்று செட்களையும் கைப்பற்றினார். இந்த நிலையில் ஜானிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் மெத்வதேவை வீழ்த்தி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர். 48 ஆண்டுகளுக்கு பின்னர் இத்தாலி வீரர் ஒருவர் சம்பியன் பட்டத்தை வென்றிருப்பது இதுவே முதல் முறை.
முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் போபண்ணா - எப்டன் ஜோடி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இத்தாலியின் போலெல்லி அண்ட்ரியா வாவசோரி ஜோடியை வீழ்த்தி போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டைத்தை வென்றது. அதேபோல், ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் மகளிர் ஒற்றயைர் பிரிவில் பெலரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Australian Open: ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் பிரிவில் போபண்ணா - எப்டன் ஜோடி சாம்பியன்!
மேலும் படிக்க:Australian Open final: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்... சாம்பியன் பட்டத்தை வென்ற சபலெங்கா!