ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:


ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று  வந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காஃபுடன் மோதினார். இதில் அரினா சபலெங்கா 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரை இறுதியில் 15-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கின்வென் ஜெங், 93-ம் நிலை வீராங்கனையான தயானா யாஸ்ட்ரெம்ஸ்காவுடன் மோதினார். இதில் கின்வென் ஜெங் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் பெலாரசியன் வீராங்கனை அரினா சபலெங்கா – கின்வென் ஜெங் இன்று பலப்பரீட்சை  நடத்தினார்கள்.


சாம்பியன் பட்டத்தை வென்ற சபலெங்கா:






ராட் லாவர் அரங்கில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று தனது ஆஸ்திரேலிய ஓபன் கிரீடத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.  இந்த வெற்றியின் மூலம், 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வென்ற விக்டோரியா அசரென்காவுக்குப் பிறகு, மெல்போர்னில் நடைபெற்ற  பெண்கள் பிரிவில் அடுத்தடுத்து பட்டத்தை வென்ற இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை பெற்றதன் மூலம் உலகின் நம்பர் 2 வீரங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் சபலென்கா. இவர் கடந்த 15 நாட்களில் தான் விளையாடிய போட்டிகளில் ஒரு ஷெட்டைக் கூட கைவிடவில்லை


 






அதேபோல், தொடக்கத்திலேயே அவர் சிறப்பாக விளையாடினார். முதல் செட்டை வெறும் 32 நிமிடங்களில் 6-3 என்ற கணக்கில் சமாளித்தார். மேலும், இகா ஸ்விடெக், நவோமி ஒசாகா, கார்பினே முகுருசா, சிமோனா ஹாலெப், பெட்ரா க்விடோவா, அசரென்கா, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோருடன் இணைந்து பல விருதுகளை  வென்ற 10வது வீராங்கனையாக உள்ளார்.