ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிருக்கான ஃப்ரீஸ்டையில் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அன்ஷூ மாலிக். சிறப்பாக விளையாடிய அன்ஷூ மாலிக் 3 சுற்று போட்டிகளை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 


 


இறுதிப் போட்டியில் இவர் ஜப்பான் வீராங்கனை சுகுமி சகுராயை எதிர்த்து மல்யுத்தம் செய்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜப்பான் வீராங்கனை சகுராய் 4-0 என்ற கணக்கில் இந்திய வீராங்கனையை பின் செய்து போட்டியை வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தை வென்றார். 57 கிலோ எடைப்பிரிவில் நடப்புச் சாம்பியனாக இருந்த அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார். 


 






அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான ராதிகா 65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். அவர் அந்தப் பிரிவில் நடைபெற்ற 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார். அவரும் ஜப்பான் வீராங்கனை மியா மொரிகாவிடம் தோல்வி அடைந்தார். மகளிருக்கான 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணீஷா பங்கேற்றார். 


 


இவர் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் தென்கொரிய வீராங்கனை ஹன்பிட் லீயை 4-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். அத்துடன் வெண்கலப்பதக்கத்தை வென்று அசத்தினார். இவர் தவிர சரிதா மோர்(59 கிலோ) மற்றும் சுஷ்மா(55 கிலோ) ஆகிய எடைப்பிரிவில்  வெண்கலப்பதக்கம் வென்றனர். மகளிருக்கான ஃப்ரீஸ்டையில் மல்யுத்த பிரிவில் இந்திய அணி 2 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தமாக 5 பதக்கங்களுடன் முடித்துள்ளது.  கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய அணி 4 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று இருந்தது. 


 


ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நாளை ஆடவருக்கான ஃப்ரீஸ்டையில் போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் இந்தியா சார்பில் ரவிக்குமார் தாஹியா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோ பங்கேற்க உள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண