நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருணைக்கும் ஒரு எல்லை இருப்பதாக கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது, “தவிர்த்து செல்லும் என்னுடைய அறியாமையை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். என்னுடைய அமைதி அதை ஏற்றுக்கொள்கிறது. என்னுடைய கருணை பலவீனம். ஆனால் அந்த கருணைக்கும் காலாவதி தேதி உண்டு.” என்று பதிவிட்டு இருக்கிறார். இவை ஆன்மீகவாதி தலாய் லாமாவின் கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப்பதிவுகளுக்கு நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துகள்:
நடிகர் நாகசைதன்யாவுடனான மன உறவை முறித்துக்கொண்ட சமந்தா தொடர்ச்சியாக படங்களில் கமிட் ஆகி வருகிறார். யசோதா, சாகுந்தலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சமந்தா, ஹாலிவுட் இயக்குநர் இயக்கும் அரேஜ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார்.
இவை தவிர்த்து பாலிவுட்டில் வருண் தவனுடன் ஒரு படம், விஜய் தேவரகொண்டாவுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார். தமிழில் இவரது நடிப்பில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் வரும் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.