ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தர்மலிங்கம் தாலியைக் கழட்ட சொல்ல, தீபா மறுப்பு தெரிவித்து ஓடி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது தீபா இப்படி செய்ததை வைத்து தர்மலிங்கம் கார்த்தியிடம், “பார்த்தீங்களா தம்பி, தீபாவுக்கு உங்களோட வாழனும்னு தான் ஆசை இருக்கு, உங்க வீட்டில் யாரோ தான் என்னமோ சொல்லி இருக்காங்க, அதனால் தான் அவ இப்படி பண்ணிட்டு இருக்கா” என்று சொல்கிறார்.
இதை கேட்டு கார்த்திக், “சரி தீபா இங்கயே இருக்கட்டும், எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணுறேன்” என்று சொல்லி விட்டு கிளம்புகிறான். அடுத்து இங்கே வீட்டில் அபிராமி, ஐஸ்வர்யா ஆகியோர் “நேரமாச்சு, இன்னும் கார்த்திக்கை காணோமே” எனக் காத்திருக்க, அப்போது கார்த்திக் கோபமாக வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறான்.
“இந்த வீட்ல இருக்கவங்க யாரோ தான் தீபாவை என்னமோ சொல்லி அனுப்பி இருக்கீங்க, எனக்கு உண்மை தெரியும் வரை நான் இந்த வீட்டில் சாப்பிட மாட்டேன்” என அதிர்ச்சி கொடுத்து உள்ளே செல்ல, மீனாட்சி “ஏன் தம்பி இப்படி சொன்னீங்க” என்று கேட்க, “மனசு கஷ்டமாக இருக்கு” என தனது மனதில் இருக்கும் கஷ்டத்தை சொல்கிறான்.
அடுத்து அபிராமி தீபாவுக்கு போன் செய்து “நீ பண்றது எதுவும் சரியில்ல, யார்கிட்டயும் எதுவும் சொல்லாமல் ஒதுங்கி போறேன்னு தானே சொன்ன” என்று கோபமாகப் பேசி போனை வைக்க, அங்கு அபிராமி பேசிய அனைத்தையும் தீபா போனை எடுத்து ஜானகி கேட்கிறார். இதனால் அபிராமி தான் தீபாவின் இந்த முடிவுக்கு காரணம் என கண் கலங்கி அழுகிறாள்.
இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.