Vidamuyarchi: துபாயில் தொடங்கும் விடாமுயற்சி ஷூட்டிங்.. படப்பிடிப்பில் இணைந்தார் பிரியா பவானி சங்கர்?

அஜித்குமார் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Continues below advertisement

விடாமுயற்சி

துணிவு படம் வெளியாகி ஓராண்டு காலம் நிறைவடைய இருக்கும் நிலையில்,  நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்காமல் இருந்தது அஜித் ரசிகர்களை பொறுமையிழக்கச் செய்தது. முதலில் விக்னேஷ் சிவன் அஜித் குமாரை இயக்க இருந்ததாக தெரிவிக்கப் பட்ட நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தப் படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகிழ் திருமேணி இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

தொடர்ந்து அஜித் பிறந்த நாளன்று படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. படத்திற்கு விடாமுயற்சி என்று டைட்டில் வைத்துவிட்டு அஜித் ஒரு பக்கம் உலக நாடுகளுக்கு சுற்றுலா செல்ல படம் பற்றிய எந்த தகவலும் தெரிவிக்காமல் படப்பிடிப்பு வேலைகள் நிலுவையில் கிடந்தன. இப்படியான நிலையில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பினார் அஜித்குமார்.

படக்குழு

இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் படக்குழு மற்றும் படப்பிடிப்புக் குறித்த தகவல்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்தத் தகவலின்படி, பெரும்பாலான படப்பிடிப்பு ஷெட்யூல் துபாயில் நடைபெற இருப்பதாகவும் மீதிக் காட்சிகள் பிற நாடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அஜித் மற்றும் த்ரிஷா இணைந்து நடிக்கும் ஐந்தாவது படமாக விடாமுயற்சி இருக்கும். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் மாஸ்டர் புகழ் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திங்களில் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து அஜித் படத்திற்கு, மீண்டும் ஒரு முறை அனிருத் இசையமைக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் திரைப்படமாக விடாமுயற்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விடாமுயற்சி படப்பிடிப்பில் இணைந்த பிரியா ஆனந்த்

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஏற்கனவே படப்பிடிப்பிற்காக அஜித் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி துபாய் சென்றுள்ள நிலையில் தற்போது நடிகை பிரியா பவானி சங்கரும் துபாய் சென்று சேர்ந்துள்ளார். தான் துபாய் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் துபாய் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமானத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola