கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மிக பிரமாண்டமாக தொடங்கியது ஆசிய விளையாட்டுப் போட்டி. இது 19 வது ஆசிய விளையாட்டு போட்டி ஆகும்.



இந்த  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள்  பங்கேற்று விளையாடி நாளுக்கு நாள் பதக்கங்களை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.


தற்போது நடைபெற்று வரும் இந்த 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுமார் 634 இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.



இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 18 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தமாக 81 பதக்கங்களை வென்றிருக்கிறது.


 இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா புதிய இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.  மேலும் , பதக்க பட்டியலில் சீனா, ஜப்பான், தென் கொரியாவிற்கு அடுத்த படியாக இந்தியா நான்காவது இடத்தை பெற்றுள்ளது.


மேலும், இன்று (அக்டோபர் 4) நடைபெற்ற , 87 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் 2-1 என்ற கணக்கில் கிரிகிஸ்தான் வீரர் அசிஸ்பெகோவை வீழ்த்தி  வெண்கலப்பதக்கம் வென்றார். இச்சூழலில் வெள்ளிப்பதக்கத்திற்கான நால்வர்  தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்தை வென்றுள்ளது.


அதன்படி 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி (வித்யா, ப்ராச்சி, ஐஸ்வர்யா, சுபா)  வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 






வாழ்த்து:


மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் இந்திய நால்வர்  ஓட்டப்பந்தய பெண்கள் அணியை வாழ்த்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 4 ) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வித்யா ராம்ராஜ், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா, பிராச்சி, மற்றும் சுபா வெங்கடேசன் ஆகியோரின் சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர். அவர்களுக்கு  வாழ்த்துகள்.






ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 4x400m தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிறந்த நால்வர் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


மேலும், சமூக வலைதளங்களில் ரசிகர்களும் இந்திய வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


2002 ஆம் ஆண்டு முதல் தங்கம்:


கடந்த 2002 ஆம் ஆண்டு  4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி பதக்கப்பட்டியலில் தங்களது முதல் தங்கப்பதக்கத்தை வென்றது. 


 முன்னதாக, 1982 ஆம் ஆண்டு முதல்  4x400 மீட்டர் தொடர்  ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி பதக்கங்களை வென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க : Asian Games 2023: பதக்க வேட்டையில் இந்தியா; 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயம்; தங்கத்தை தட்டித் தூக்கிய தங்கமகன்கள்..!


மேலும் படிக்க: Thalaivar 170: ஜோராக நடந்த “தலைவர் 170” பட பூஜை.. சூப்பரான லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..வைரல் போட்டோ..!