ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார். 


சீனாவில் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஜப்பான் வீராங்கனை மிசாக்கி எமுராவை வீழ்த்தி பவானி தேவி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெண்கலம் உறுதியாகியுள்ளது. 


இதன் மூலம் பவானி தேவி ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். 


பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியா சார்பில் விளையாடி இருந்தார். மகளிருக்கான தனிநபர் சேபர் பிரிவு அரையிறுதிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. உலகின் முதல் நிலை வீராங்கனையான  மிசாகி எமுராவை எதிர்கொண்டார். விறுவிறுப்பான போட்டியில் 15-10 என்ற செட் கணக்கில் பவானி தேவி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  இதற்கு முன் மிசாகிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் பவானி தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் வாசிக்க..


TN Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் அடித்து வெளுக்கப்போகும் மழை... தயாரா இருங்க மக்களே..!


Lokesh Kanagaraj: ‘சினிமாவை விட்டு போகப்போகிறேன்’ ... இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவலால் அதிர்ச்சி..