ஏழாவது ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகின்ற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. ஆசிய கண்டத்தில் சிறந்து விளங்கும் 6 அணிகள் தற்போது கோப்பை வெல்ல இந்த போட்டியில் களமிறங்குகின்றனர். 


கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் முதல் முறையாக மிகப்பெரிய போட்டி தொடர் இதுவாகும். மேலும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறை.


இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா மூன்று முறை கோப்பையை வென்று, போட்டி வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. 


இந்தநிலையில், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தின் சிறப்பு அம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் : 


அரசியல்வாதியான மேயர் ராதாகிருஷ்ண பிள்ளையின் பெயரால் இந்த மைதானம் கடந்த 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1996 ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி இதே மைதானத்தில் வெகு சிறப்பாக நடந்தது. 


1996 ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: 


1996 ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியானது டிசம்பர் 7 ம் தேதி முதல் 15ம் தேதி வரை மெட்ராஸில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இந்தியா, நெதர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் ஸ்பெயின். இதில், ஜெர்மனி அணியே கோப்பையை வென்றது.


2005 ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: 


2005 ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் 27வது போட்டியாக இந்த மைதானத்தில் நடைபெற்றது, இந்த போட்டி டிசம்பர் 10 முதல் 18 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா அணி கோப்பை வென்றது. 


2007 ஆண்கள் ஹாக்கி ஆசிய கோப்பை: 


கடந்த 2007 ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இந்திய கேப்டன் பிரப்ஜோத் சிங் மூவர்ணக் கொடியை அசைத்து கோப்பையை வென்ற தருணம். ஒவ்வொரு ஹாக்கி ரசிகருக்கும் மறக்க முடியாத நினைவு. 2007ல் தென் கொரியாவை 7-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா ஆசியக் கோப்பையை வென்று அசத்தியது. இந்த போட்டி இது 31 ஆகஸ்ட் - 9 செப்டம்பர் 2007 வரை சென்னையில் நடைபெற்றது. இந்தியா தங்கத்தையும், கொரியா வெள்ளியையும், மலேசியா வெண்கலத்தையும் வென்றன.


2005 புதுப்பிக்கப்பட்ட மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம்: 


2005 ம் ஆண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தை புதுப்பித்து, செயற்கை ஹாக்கி புல்வெளியை மீண்டும் அமைத்து,  சர்வதேச தரத்திற்கு ஒளிரும் விளக்குகளை பயன்படுத்தி பிரமிக்க செய்தது. 


சிறப்பு அம்சங்கள்: 


புகழ்பெற்ற மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரவிருக்கும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிக்கு  8,670 பேர் அமரும் வசதி கொண்டதாக உள்ளது. இங்கு ஹாக்கி  ஸ்டேடியத்தை தவிர, நான்கு டென்னிஸ் களிமண் மைதானங்கள், மூன்று கைப்பந்து மைதானங்கள், நான்கு பேட்மிண்டன் மண் மைதானங்கள் மற்றும் ஒரு உடற்பயிற்சி மையம் ஆகியவை உள்ளது. 


இதுவரை இங்கு நடைபெற்ற மிகப்பெரிய போட்டிகள்: 


1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (1995), சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டு பதிப்புகள் (1996 & 2005), ஆசிய கோப்பை (2007), இந்தியா-பாகிஸ்தான் தொடர் (1999) போன்ற சில சர்வதேச ஹாக்கி போட்டிகளை நடத்தியதற்காக இந்த மைதானம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. இந்தியா-பெல்ஜியம் தொடர் (2008). MCC-முருகப்பா அகில இந்திய தங்கக் கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.