ஆசியன் சாம்பியன்ஸ் டிராபி 2023 ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி வருகின்ற 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆசியாவை சேர்ந்த சிறந்த ஆறு அணிகளான இந்தியா, தென் கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் சீனா இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. லீக் ஸ்டேஜில் ஆறு அணிகளும் ரவுண்ட்-ராபின் வடிவத்தில் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிந்ததும், நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதே நேரத்தில் கடைசி இரண்டு அணிகள் ஐந்தாவது இடத்திற்கான போட்டியிலும் மோதும். இரண்டு அரையிறுதி வெற்றியாளர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இறுதிப் போட்டியில் விளையாட இருக்கின்றனர். அதே நேரத்தில் தோல்வியடைந்த இரு அணிகளும் மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் போட்டியில் ஒருவருக்கொருவர் விளையாடுகின்றன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் , உலகின் 16வது இடத்தில் உள்ள பாகிஸ்தானும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் தலா மூன்று பட்டங்களுடன் அதிக வெற்றி பெற்ற அணிகளாக திகழ்கின்றன. 

2021 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நடத்திய ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கியின் கடைசி பதிப்பில் ஜப்பானை வீழ்த்தி தென் கொரியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசியன் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023 புள்ளி பட்டியல்: 

தரவரிசை அணிகள் போட்டி வெற்றி டிரா தோல்வி புள்ளிகள்
1* மலேசியா 2 2 0 0 6
2* இந்தியா 2 1 1 0 4
3* தென் கொரியா 2 1 1 0 4
4* ஜப்பான் 2 0 1 1 1
5 பாகிஸ்தான் 2 0 1 1 1
6 சீனா 2 0 0 2 0

இதுவரை நடைபெற்ற போட்டி முடிவுகள் என்ன..? 

ஆகஸ்ட் 3, வியாழன்

கொரியா 2-1 ஜப்பான் (கொரியா வெற்றி)

மலேசியா 3-1 பாகிஸ்தான் (மலேசியா வெற்றி)

இந்தியா 7-2 சீனா (இந்தியா வெற்றி)

ஆகஸ்ட் 4, வெள்ளி

கொரியா 1-1 பாகிஸ்தான் (போட்டி டிரா)

சீனா 1-5 மலேசியா (மலேசியா வெற்றி)

இந்தியா 1-1 ஜப்பான் (போட்டி டிரா)

நடைபெற இருக்கும் போட்டிகள்:

ஆகஸ்ட் 6, ஞாயிறு

சீனா vs கொரியா

பாகிஸ்தான் vs ஜப்பான்

மலேசியா vs இந்தியா

ஆகஸ்ட் 7, திங்கள்

ஜப்பான் vs மலேசியா

பாகிஸ்தான் vs சீனா

கொரியா vs இந்தியா

ஆகஸ்ட் 9, புதன்

ஜப்பான் vs சீனா

மலேசியா vs கொரியா

இந்தியா vs பாகிஸ்தான்