ஆண்களுக்கான ஆசியன் சாம்பியன்ஸ் டிராபியின் 7வது பதிப்பு தற்போது சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி, நேற்று தென் கொரியாவை 3-2 என்ற கணக்கில் வென்றது.
இந்த வெற்றியின்மூலம் அரையிறுதிக்குள் நுழைந்த ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, தற்போது புள்ளி பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது.
மலேசியா அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியிடம் தோற்றாலும், பாகிஸ்தான் (3-1), சீனா (5-1), ஜப்பான் (3-1) ஆகிய அணிகளை வென்றதன் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நடப்பு சாம்பியனான தென் கொரியா புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 1 வெற்றி, 1 தோல்வி, 2 டிராவுடன் 4வது இடத்தில் உள்ளது.
புள்ளி பட்டியல்:
தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | டிரா | தோல்வி | புள்ளிகள் |
---|---|---|---|---|---|---|
1* | இந்தியா | 4 | 3 | 1 | 0 | 10 |
2* | மலேசியா | 4 | 3 | 0 | 1 | 9 |
3* | தென் கொரியா | 4 | 1 | 2 | 1 | 5 |
4* | பாகிஸ்தான் | 4 | 1 | 2 | 1 | 5 |
5 | ஜப்பான் | 4 | 0 | 2 | 2 | 2 |
6 | சீனா | 4 | 0 | 1 | 3 | 1 |
இதுவரை நடந்த போட்டி முடிவுகள்:
ஆகஸ்ட் 3, வியாழன்
கொரியா 2-1 ஜப்பான் (கொரியா வெற்றி)
மலேசியா 3-1 பாகிஸ்தான் (மலேசியா வெற்றி)
இந்தியா 7-2 சீனா (இந்தியா வெற்றி)
ஆகஸ்ட் 4, வெள்ளி
கொரியா 1-1 பாகிஸ்தான் (போட்டி டிரா)
சீனா 1-5 மலேசியா (மலேசியா வெற்றி)
இந்தியா 1-1 ஜப்பான் (போட்டி டிரா)
ஆகஸ்ட் 6, ஞாயிறு
சீனா 1-1 கொரியா (போட்டி டிரா)
பாகிஸ்தான் 3-3 ஜப்பான் (போட்டி டிரா)
மலேசியா 0-5 இந்தியா (இந்தியா வெற்றி)
ஆகஸ்ட் 7, திங்கள்
ஜப்பான் 1-3 மலேசியா (மலேசியா வெற்றி)
பாகிஸ்தான் 2-1 சீனா (பாகிஸ்தான் வெற்றி)
கொரியா 2-3 இந்தியா (இந்தியா வெற்றி)
மீதமுள்ள போட்டிகள்:
ஆகஸ்ட் 9, புதன்
ஜப்பான் vs சீனா
மலேசியா vs கொரியா
இந்தியா vs பாகிஸ்தான்
ஆகஸ்ட் 11, வெள்ளிக்கிழமை
ஐந்தாவது இடம் - ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள அணிகளுக்கிடையே மோதல்
அரையிறுதி 1 - இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகளுக்கிடையே மோதல்
அரையிறுதி 2 - முதல் மற்றும் நான்காவது இடத்தில் உள்ள அணிகளுக்கிடையே மோதல்
ஆகஸ்ட் 12, சனிக்கிழமை
மூன்றாவது இடத்திற்கான போட்டி- அரையிறுதி 1 தோல்வியடைந்த அணி vs அரையிறுதி 2 தோல்வியடைந்த அணி
இறுதி - வெற்றியாளர் அரையிறுதி 1 vs வெற்றியாளர் அரையிறுதி 2