தமிழ்நாடு முதல்வர் பங்கேற்கும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூத்துக்குடி மாவட்டம் அமலிநகர் மீனவர்கள் அறிவித்துள்ளார்கள்.




தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகரில் சுமார் 1000 மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 200 பைபர் படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றர். இந்தநிலையில்  கடல் சீற்றத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு கரையில் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும், அடிக்கடி படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் காயம் அடைவதாகவும், இந்தப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக்கூடிய தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.




இதனைத்தொடரந்து  2022 -ம் ஆண்டு சட்டப்பேரவை மீன்வள மானிய கோரிக்கையில் ரூ 58 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் எந்த பணிகளும் நடைபெறாததால் இந்தப் பகுதி மீனவர்கள் முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சுமார் 200 படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1.50 கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.




இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமலி நகர் மீனவர் நலக்கமிட்டியை சேர்ந்த குளோரியான் கூறுகையில், "அமலி நகரில் உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் 18-ம் தேதி இராமநாதபுரத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணணின் சொந்த தொகுதியை சார்ந்த மீனவர்கள் முதல்வர் பங்கேற்கும் மீனவர்கள் மாநாட்டை புறக்கணித்து  போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண