ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
அரையிறுதி:
போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன.
சௌத் கொரியா - மலேசியா:
இன்று நடைபெறும் ( ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி) நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா மற்றும் பலமான மலேசியா அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் நடைபெற்ற லீக் தொடரில் மலேசியா அணி 1-0 என்ற கணக்கில் சௌத் கொரியாவை வீழ்த்தியது. நடப்புத் தொடரில் மலேசிய அணி தனது 5 லீக் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் தோல்வி அடைந்தது. மற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
சௌத் கொரியா அணி 5 லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றது. இரண்டு போட்டியில் டிராவும், இரண்டு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் மலேசிய அணி சௌத் கொரியாவை எதிர்கொள்கிறது.
இரு அணிகளும் இதுவரை இரு அணிகளுக்கு இடையிலான போட்டி, ஆசிய அளவிலான போட்டி, சர்வதேச ஹாக்கி போட்டி என அனைத்து வகை சர்வதேச போட்டியிலும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரு அணிகளுக்கு இடையில் இதுவரை 31 போட்டிகள் நடைபெற்றன. மலேசியா அணி 10 போட்டிகளில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், சௌத் கொரியா அணி 16 முறை வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் சௌத் கொரியா அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.
இரு அணி விபரங்கள்
மலேசியா: முஹாஜிர் அப்து, ஹசன் நஜிப், ரமலான் ரோஸ்லி, மர்ஹான் ஜலீல், ஃபித்ரி சாரி, அஷ்ரன் ஹம்சானி, பைசல் சாரி, அமினுதீன் முகமது, ஃபிர்ஹான் அஷாரி, காலிக் ஹம்ரின், ஷெல்லோ சில்வேரியஸ், ஜைமி மாட் டெரிஸ், ரஸி ரஹீம், ஃபைஸ் ஜாலி, அத்மான் ஜலீ , கமல் அஸ்ராய் அபு, நஜ்மி ஜஸ்லான், முஹம்மது ஹசன், அமிருல் அஸாஹர்.
சௌத் கொரியா: ஜேஹியோன் கிம், ஹியோன்ஹாங் கிம், கியூபியோம் கிம், யோங் லீ நாம், மஞ்சே ஜங், டெய்ன் சன், ஜங்ஹூ கிம், தைல் ஹ்வாங், ஜங்ஜுன் லீ, சியோன் ஜி வூ, சியோலியன் பார்க், ஹைஸுங் லீ, ஜேஹான் கிம், காங்சன் லீ, சுங்சன் லீ, ஜுன்வூ ஜியோங், ஜின்கியோங் கிம், சியுங்ஹூன் லீ, டேஹ்யுன் கிம், ஹியோங்ஜின் கிம், ஜாங்யுன் ஜாங், ஜிக்வாங் ஹியூன், ஜுயோங் லீ, ஜிஹுன் யாங்.