ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவில் முதல் முறையாக நடத்தபடுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் சென்னையில் உள்ள ராதாகிருஷ்ணன் மைதானத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாட்டில் மிகவும் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த தொடரில் நடப்புச் சாம்பியன் சௌத் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா மற்றும் மலேசியா அணிகள் களமிறங்கின.
போட்டி அட்டவணைப் படி ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதியது. அதில் இந்தியா, மலேசியா, சௌத் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதிக்கு முதலில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் தகுதி பெற்றன. அடுத்த இரண்டு அணிகள் எவை எவை என்பதை நேற்று அதாவது ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற போட்டிகளின் முடிவுகளை வைத்து முடிவு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அடுத்த இரண்டு அணிகளாக சௌத் கொரியாவும் ஜப்பானும் தகுதி பெற்றன.
நாளை அதாவது ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியைப் பொறுத்தவரையில் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. ஆனால் ஒரு போட்டியில் டிரா செய்துள்ளது. அது ஜப்பான் அணிக்கு எதிராகத்தான். அந்த அணியுடன் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் களமிறங்குவதால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டு முதல் இதுவரை (இந்த ஆண்டை சேர்த்து) 7 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மொத்தம் 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த மோதலில், இந்தியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, ஜப்பான் இரண்டில் வெற்றி பெற்றது. எஞ்சிய இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
அதேபோல் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் இதுவரை அனைத்து வகை போட்டிகளிலும் மொத்தம் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்திய அணியின் கரமே உயர்ந்துள்ளது. அதாவது இந்திய அணி இதுவரை 27 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஜப்பான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் நாளை இரு அணிகள் மோதுவதால் இந்திய அணியின் கரமே உயர்ந்து காணப்படும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.
போட்டி டிரா ஆனால்?