ஆசிய கோப்பை 2022 ஹாக்கி தொடர் இன்று இந்தோனேஷியாவில் தொடங்கியது. இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதற்கு முன்பு வரை 8 முறை மோதியிருந்தன. அதில் இந்தியா மூன்று முறையும், பாகிஸ்தான் அணி 5 முறையும் வெற்றி பெற்று இருந்தன. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 2 முறையும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. 


 


இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் முதல் கால்பாதியில் இரு அணிகளும் தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடித்தது. அதன்பின்னர் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய இந்திய அணி முதல் கோலை அடித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது வீரர் கார்த்தி செல்வம் முதல் கோலை அடித்தார். இதனால் முதல் கால்பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.


 






தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி முதல் முறையாக இந்திய சீனியர் அணியில் களமிறங்கியுள்ளார். அவர் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் கோலை அடித்து அசத்தியுள்ளார்.


ஆசிய ஹாக்கி கோப்பையில் ஏ பிரிவில் 4 அணிகளும், பி பிரிவில் 4 அணிகளும் இடம்பிடித்துள்ளன. பி பிரிவில் மலேசியா, தென்கொரியா, ஓமன் மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடுகின்றனர். இன்று பாகிஸ்தானுடன் ஆடும் இந்திய அணி நாளை ஜப்பானுடனும், நாளை மறுநாள் இந்தோனேஷியாவுடனும் மோத உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண