இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ’Article 15’ படத்தின் ரீமேக்கான ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


இந்தியில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படம், தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது.


இதையும் படிங்க: ''நெஞ்சுக்கு நீதி பாருங்க''.. திமுக சாதனைக் கூட்ட மேடையில் படபடவென பேசிய அமைச்சர் பொன்முடி!


இந்நிலையில், இப்படம் தொடர்பாக தனியார் யூடியூப் சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளார். 


இதுகுறித்துப் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், ”தமிழில் உள்ள பெரிய நடிகர்கள் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, படத்துக்கு செலவு செய்தால் பெட்டராக இருக்கும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் ’கே ஜி எஃப் 2’. இந்தப் படத்தில் ஹீரோவுக்கு மிகக்குறைந்த அளவே சம்பளம் தரப்பட்டுள்ளது. மீதி பணம் முழுவதும் படத்தின் மேக்கிங்கில் செலவிடப்பட்டுள்ளது, படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது.


படம் அவ்வளவு பிரம்மாண்டமாக உள்ளது. ஆனால் தமிழில் ஒரு படத்தின் 65 விழுக்காடு பட்ஜெட், ஹீரோவுக்கு மட்டுமே சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள ஹீரோக்கள் முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக காமெடி மற்றும் குடும்பப் படங்களில் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு, சமூக அக்கறை மற்றும் நல்ல கருப் பொருள் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.


இதையும் படிங்க: மாமன்னன் ஷூட்டிங்கிற்கு செல்லாமல் முதல்நாளே கட்டடித்த உதயநிதி..!


அதன்படி தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’மாமன்னன்’ படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண