மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்ததைத் தொடர்ந்து, ஒரு உணர்ச்சிகரமான ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
மான்செஸ்டரில் நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் தான் இந்தியாவுக்கு தினேஷ் கார்த்தி ஆடிய கடைசி போட்டியாகும். அதன்பிறகு டி20 அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். தற்போது ஆர்சிபி அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்ததால் மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பிடித்துள்ளார்.
அவரது 37 வது பிறந்தநாளுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 தொடருக்கான அணியில் அவர் அறிவிக்கப்பட்டபோது, கார்த்திக் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அற்புதமான ஆட்டங்களால் தேசிய தேர்வாளர்களின் கதவை உடைத்துள்ளார். பலர் அவரை இந்திய அணியின் சிறந்த ஃபினிஷர் என்று கூறுகின்றனர்.
இந்த சீசனில் அதிக நேரம் ஆர்சிபி பேட்டிங் லைன்-அப்பை சுமந்துகொண்டு, கார்த்திக் 191 ஸ்டிரைக் ரேட்டில் 287 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த வேறு எந்த பேட்டரும் கார்த்திக்கை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கவில்லை. டெத் ஓவரில், அவரது ஸ்ட்ரைக் 226 ரன்கள். அனைவரையும் உற்சாகப்படுத்திய கார்த்திக்கின் ஃபார்ம், "டிகே, டிகே" என்று பார்வையாளர்களை கோஷமிட வைத்தது. அவரின் ஆட்டம் ஆர்சிபியை பிளேஆஃப்களுக்குள் செல்ல உதவியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக தேசிய அணியில் விலகியிருந்ததால், கார்த்திக் தன் மீதுள்ள நம்பிக்கையை வைத்து, விஷயங்களை சரியான இடங்களில் காண்பிக்க கடுமையாக உழைத்தார். இந்த ஆண்டின் பிற்பகுதியில் டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியாவுக்கு விமானம் செல்வதற்கான இடத்தை உறுதிப்படுத்த மேலும் கடினமாக உழைக்க அவர் உறுதியளித்துள்ளார்.
“உன்னை நீ நம்பினால், எல்லாம் சரியாகிவிடும்! அனைத்து ஆதரவுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி... கடின உழைப்பு தொடர்கிறது,” என்று அணியில் தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் கார்த்திக் ட்வீட் செய்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்