மிகவும் பிரபலமான ஆன்லைன் செஸ் தளமான செஸ் டாட் காம் நடத்திய  வாராந்திர பிளிட்ஸ் போட்டியில் இந்தியாவின் நம்பர்-1 வீரர் அர்ஜூன் எரிகைசி முதல் பரிசை வென்றார்.


கார்ல்சன் தோல்வி:  


செவ்வாய்கிழமை நடந்த இந்த போட்டியின் அர்ஜூன் எரிகைசி 11 சுற்றுகளில் விளையாடி 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்த போட்டியில் அவர் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை 10 வது சுற்றில் வீழ்த்தினார்.  இது மட்டுமின்றி உலகின் இரண்டாம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவையும் வீழ்த்தினார். 


இதையும் படிங்க: Ind W vs IRE W : அயர்லாந்தை சுக்குநூறாக சிதைத்த இந்தியா! ஒரே போட்டியில் பல ரெக்கார்ட்களை நொறுக்கிய சிங்கப் பெண்கள்


ஒரே  போட்டியில் தோல்வி: 


இந்த தொடரில் எரிகைசி உலகின் நான்காம் நிலை வீரரான ஹிகாரு நகமுராவிடம் 7 வது சுற்றில் தோல்வியடைந்தார். மெரிக்க நகமுரா உலகின் மூன்றாவது தரவரிசை வீரர், எரிகைசி FIDE கிளாசிக்கல் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






இந்த போட்டியில் உலக செஸ் சாம்பியனான குகேஷ் கலந்து கொள்ளவில்லை, ஆன்லைனில் நடக்கும் பிலிட்ஸ் செஸ் போட்டிகளில் செஸ் டாட் காமில் உள்ள வீரர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும். 


இதையும் படிங்க: ind w Vs ire w: என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது


கடந்த ஆண்டு, எரிகைசி  2800 மதிப்பீட்டை எட்டினார் செஸ்  வரலாற்றில் 16 கிராண்ட்மாஸ்டர்கள் மட்டுமே இந்த புள்ளிகளை மட்டுமே எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இது குறித்து பேசிய எரிகைசி ““வெற்றி பெற்ற பிறகு திருப்தி ஏற்பட்டது. ஆனால், அந்த ஆட்டத்தில் நான் ஒரு வலிமையான வீரருக்கு எதிராக வெற்றி பெற்றதால் தான், 2800 ரன்களை எட்டியதால் அல்ல. வெற்றி பெற்றால் 2800ஐத் தாண்டுவேன் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில், அது என் மனதில் இல்லை... என நினைத்தேன். எனது ஆட்டத்தில் நான் வெற்றி பெறுகிறேன், ஒட்டுமொத்த போட்டியும் முடிந்துவிட்டது. எனவே, ஆம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன் என்று தெரிவித்தார்.