விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'LIK” படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லைஃப் இன்சூரன்ஸ் கம்பேனி. இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரீலிஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இப்படம் வருகிற மே 16 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது
இதையும் படிங்க: நடிகை வரலட்சுமியின் தல பொங்கல் கொண்டாட்டம் வேற லெவல்..குடும்பத்துடன் வெளியிட்ட ரீல்ஸ்
சீமான்:
மேலும் இப்படத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிப்பதாக முன்னரே தகவல் வெளியானது, ஆனால் படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடித்து இருப்பதை உறுதி செய்யும் வகையில் படக்குழுவினர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை செவன் ஸ்கீரின் ஸ்டியோஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் படத்தில் பதிவிட்டுள்ளது.
மீண்டும் வெள்ளித்திரையில்:
இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய சீமான் 1997 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி படத்தை இயக்கினார். அதன் பின்னர் தம்பி, வாழ்த்துக்கள் முதலிய படங்களை இயக்கியும் மயாண்டி குடும்பத்தார், பள்ளிக்கூடம் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். அரசியலில் இறங்கிய பிறகு திரைப்படங்களை இயக்குவதையும், நடிப்பதையும் பெரும்பாலும் தவிர்த்து வந்தாலும். அவ்வப்போது சிறிய கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் தான் LIK படத்தில் சீமான் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.