2021ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த நவம்பர் 09 அன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். வெவ்வேறு பிரிவுகளில் புலமை வாய்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இதில், விளையாட்டு துறைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரையும் ஒருவர். இந்திய மகளிர் கூடைப்பந்தின் தாய் என அழைக்கப்படும் இந்த அனிதா பால்துரையைப் பற்றிய சின்ன ப்ரொஃபைல் இதோ! 


யார் இந்த அனிதா பால்துரை?


அனிதா பால்துரை - இவரது ட்விட்டர் கணக்கை தேடினால் ஒரு அக்கவுண்ட் கண்ணிக் சிக்குகிறது. ப்ளே டிக் பெறாத அக்கவுண்ட் என்பதால் இவரது அதிகாரப்பூர்வ அக்கவுண்ட் தானா என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால், இந்திய கூடைப்பந்தின் தாய் என போற்றப்படும் அனிதா பால்துரை விளையாட்டு உலகை தாண்டி சாமனியர்களுக்கு அவ்வளவு பரிச்சயமாக இருக்கவில்லை. 


முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து அணியின் கேப்டனான அனிதா, கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியவர். 35 வயதான அவர், தனது விளையாட்டு கரியரில் சிறப்பாக செயல்பட்டபோது அர்ஜூனா விருது அவருக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு அர்ஜூனா விருதுதான் அவருக்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.ழ்


சென்னையைச் சேர்ந்த அவர், தனது 11 வயது முதல் கூடைப்பந்து விளையாடி வருகிறார். கூடைப்பந்து மட்டுமின்றி தடகளத்திலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், கூடைப்பந்தையே தேர்வு செய்து ஃபோகஸ் செய்திருக்கிறார். அதுவே அவரது கரியராகவும் மாறி இருக்கிறது. பி.காம், எம்பிஏ படித்திருக்கும் அனிதா, கூடைப்பந்து விளையாட்டிலேயே முழுமையான கவனம் செலுத்தி இருக்கிறார். இதனால், அவருக்கு விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டில் தெற்கு இரயில்வேயில் அவருக்கு வேலை கிடைத்தது. 



17 ஆண்டுகளில், தேசிய அளவில் 30-க்கும் அதிகமான பதக்கங்களை பெற்றிருக்கும் அவர், இந்திய மகளிர் கூடைப்பந்து விளையாட்டுக்கு தனது இளமை காலத்தின் பெரும் பகுதியை அர்பணித்திருக்கிறார். இடையில், திருமணமாகி குழந்தை பிறந்தபோது இடைவெளி எடுத்து கொண்ட அவர், இரண்டே ஆண்டுகளில் மீண்டும் கம்-பேக் தந்து அசத்தினார். பதக்கங்களை வென்று குவித்த அவருக்கு விருது மட்டும் கைகூடவே இல்லை. 


இந்நிலையில், அனிதா பால்துரைக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது மூலம்,  கூடைப்பந்து விளையாட்டும், மகளிர் கூடைப்பந்து விளையாட்டும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் சென்றைடய வேண்டும் என்பதே அவரது விருப்பமாகவும் உள்ளது. இதுவே அவரது நம்பிக்கையும் கூட. வாழ்த்துகள் அனிதா!


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண