தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வாணியர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி பவித்ரா திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் தனியாக வந்துள்ளார். அப்பொழுது அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த  வாலிபர் ஒருவர், திருமண மண்டபம் அருகே யாரும் இல்லாத இடத்தில் திடீரென பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த ஆரம் செயினை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்திரா, திருடன், திருடன் என சத்தமிட்டுள்ளார். தொடர்ந்து அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து, நகை பறித்து சென்று ஓடிய திருடனை துரத்திச் சென்று பிடித்தனர்.

 



 

தொடர்ந்து திருடனை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பஞ்சப்பள்ளி அடுத்த ஏரி பஞ்சப்பள்ளியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் பறித்துச் சென்ற நகை தங்கம் இல்லை.  சுமார் 1500 மதிப்புள்ள கவரிங் ஆரம்  என்பது தெரிந்தது. இதனை அடுத்து பவித்ரா கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் சாம்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர். தங்கம் என நினைத்து கவரிங் செயினை பறித்து சென்று, வாலிபர்  கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 



காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 24,000 கன அடியிலிருந்து 20,000 கன அடியாக நீர்வரத்து குறைந்தது.

 

தமிழக, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து.

 



 

தொடர்ந்து மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நேற்று காலை வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து வினாடிக்கு 24,000 கன அடியாக குறைந்தது. தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், இன்று காலை மேலும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 24,000 கன அடியிலிருந்து, 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினியருவி உள்ளிட்ட பகுதிகளில் பார்ப்பதற்கு ரம்மியமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றின் கரையோரத்தில் வருவாய்த் துறை, காவல் துறையினர், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்டோர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.