அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, போபால், புவனேஸ்வர் அணிகள் வெற்றி பெற்றன.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  அகில இந்திய அளவிலான பல்வேறு  ஹாக்கி அணிகள், அதாவது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் - அகமதாபாத், சென்ட்ரல் செக்ரிட்டேட் - நியூ டெல்லி, சவுத் சென்ட்ரல் ரயில்வே - செகந்திராபாத், என்.சி.ஓ.இ. (நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்) - போபால் மற்றும் எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் - கோவில்பட்டி உட்பட 16 சிறந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது.




மூன்றாம் நாள் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியும் ஒடிஷா டாடா நாவல் ஹாக்கி அகாடமி அணியும் மோதின. இதில் 6:4 என்ற கோல் கணக்கில் சென்னை இன்கம் டேக்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 2வது போட்டியில் மும்பை யூனியன் பேங்க் அணியும், போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வெற்றிப் பெற்றது. 3வது போட்டியில் சென்னை இந்தியன் பேங்க் அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் அணியும் மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 4வது போட்டியில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்றது.




நான்காம் நாளான இன்று காலையில் நடைபெற்ற போட்டியில் ஜி.எஸ்.டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணி கர்நாடகா அணியும் அதனை எதிர்த்து ஹாக்கி பெல்லாரி அணியும் மோதியது. இதில் ஹாக்கி பெல்லாரி அணி 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இன்று மாலை நடைபெறும் போட்டியில் சென்னை, அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதுகின்றன. அதனை தொடர்ந்து சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியகளும், மூன்றாவது போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் மோதுகின்றன.