ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அதிகபட்ச லீட் பெற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியின் விளையாட்டு டி20 கிரிக்கெட் உலக கோப்பை ரசிகர்களுக்கு நேற்று நல்ல விருந்தாக இருந்தது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே ஜொலித்தது ஆப்கான் அணி. குறிப்பாக அறிமுக பந்துவீச்சாளராக களமிறங்கிய முஜ்பூர் ரஹ்மான், தனது அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 






19 வயதில் அணிக்காக களமிறங்கிய அவர், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜ்பூரின் பந்து வீச்சை கண்டு மிரண்டு போன ஸ்காட்லாந்து அணி, அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்தது. 190 என்கிற இமாலய இலக்கில் பாதி ரன் கூட சேர்க்க முடியாமல் திணறி தோற்றது ஸ்காட்லாந்து. அந்த அணியின் 5 வீரர்கள் ‛டக்’ அவுட் ஆகினர். எஞ்சியிருப்பார்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். 


அத்தனைக்கும் காரணம்... முஜ்பூரின் சூறாவளி சுழல் தான். ஐபிஎல்.,யில் இந்தமுறை ஐதராபாத் அணியில் எடுக்கப்பட்ட அவர், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும் தனது நாட்டிற்காக விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமாக பந்து வீசி பலரின் கவனத்தை பெற்றார். 






ஆப்கான் அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் இருந்தும், அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை அள்ளிய முஜ்பூரின் பந்து வீச்சு விபரம் இதோ...


ஆப்கான் அணியின் நேற்றைய போட்டி குறித்த கூடுதல் செய்திக்கு...






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண