செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஃபோர் பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதியில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. வீரர்கள், செஸ் விளையாடுவதற்கு 22 ஆயிரம் சதுர அடியில் பழைய அரங்கம், தற்காலிகமாக 52 ஆயிரம் சதுர அடியில் புதிய அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.




 இன்று  காலை 10 மணிக்கு ஒத்திகை செஸ் போட்டி தொடங்கி நோபல் உலக சாதனை படைப்பதற்காக 1414 பேர் பங்கேற்க கூடிய இந்த அரங்கில், 707 போர்டுகளில் வீரர், வீராங்கனைகள் செஸ் விளையாட உள்ளனர். 707 போர்டுகளில், விளையாடும் போட்டியை ஆன்லைன் மூலமாக உலகம் முழுவதும் பார்க்கக்கூடிய வகையில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு துறை அமைச்சர்மெய்யநாதன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.  அன்பரசன் ,முதன்மை தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.




இந்த, நோபல் உலக சாதனை படைக்கக்கூடிய இந்த போட்டியானது,  இன்று காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை தொடர்ந்து 9 மணி நேரம் நடக்க உள்ளது. பங்கேற்க, வரும் வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 350 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் நான்கு வருடத்தில் செய்ய வேண்டிய பின் பணியை முதலமைச்சர் நான்கு மாதத்தில் செய்து முடித்துள்ளார். தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே இந்த போட்டி நடைபெறுவது பெருமையாக அமைந்துள்ளது. கிராமங்கள் நகரங்கள் தோறும், செஸ் காய்ச்சல் தொடங்கிவிட்டது குக்கிராமம் வரை இந்தப் போட்டி பற்றிய செய்தி சென்று சேர்ந்துள்ளது. அவர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடவுள்ளனர் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு உணவும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே கொடுக்கப்படும். 19 துறை சார்ந்த அலுவலர்கள் இந்த போட்டியை சிறப்பாக நடைபெற பணியாற்றி வருகின்றனர்.  இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக சர்வதேச கூட்டமைப்பு தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்ததாக அமைச்சர் தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்  நாத் உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.