செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் டாப் 5 இடங்களையும், பெண்கள் பிரிவிலும் டாப் 10 இடங்களையும் வென்ற நாடுகள் பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் மிகவும் கோலகலமாக ஜூலை மாதம் 29ம் தேதி தொடங்கி, இன்று நிறைவு விழா மிகவும் பிரமாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 

ரஷ்யா சீனாவுக்கு இடமில்லை

இந்தியாவில் முதல் முறையாக அதுவும், சென்னையில் நடைபெற்ற இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பெற்ற வெற்றிகள் அனைத்தும் மிகவும் உலக அளவில் கவனம் பெற்ற வெற்றியாக பதிவானாலும், வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக உலகமே பார்க்கும் வெற்றி, உக்ரைன் பெண்கள் அணி பெற்ற வெற்றி தான். இந்த செஸ் ஒலிம்பியாட்டில், தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்றனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர். மொத்தம் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், 162 அணிகள் பெண்கள் பிரிவிலும் கலந்து கொண்டன. இதுவரை நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்ட நாடுகளின் எண்ணிக்கையினைவிட இந்த முறை கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகம். அதாவது, இதற்கு முன்னர் 2018ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அதிக பட்சமாக 180 நாடுகள் போட்டியில் பங்கெடுத்தன. இதுவரை இல்லாத அளவில் 187 நாடுகள் இம்முறை களமிறங்கினாலும், செஸ் ஒலிம்பியாட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் ரஷ்யா மற்றும் சீனா இம்முறை கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்த காரணத்திற்காக ரஷ்யாவும், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சீனாவுக்கும் அனுமது மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தோல்வியை சந்திக்காத உக்ரைன் பெண்கள் அணி

ஒலிம்பியாட்டைப் பொருத்தவரை, 11 லீக் போட்டிகள் சுவிஸ் லீக் வடிவத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு அணியும் மிகவும் கடினமான ஒவ்வொரு சுற்றுகளைக் கடந்து  அடுத்தடுத்த கட்டத்துக்கு முன்னேறின. இதில் பெண்கள் பிரிவில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அணி, 11 போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றியும், நான்கு போட்டிகளில் சமனும் செய்துள்ளன. ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத உக்ரைன் பெண்கள் அணி, பதக்கத்திற்கான இறுதி லீக் போட்டியில், போலாந்து பெண்கள் அணியினை சந்தித்தது. போட்டி தொடங்கியதில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி, நான்கு போட்டிகளில், 3-1 என்ற கணக்கில் வென்று உக்ரைன் பெண்கள் அணி, உலக செஸ் சாம்பியன் பட்டத்தினை வென்றது. மேலும், இரண்டாவது இடத்தில் ஜார்ஜியா அணி வென்று வெள்ளி பதக்கத்தையும், இந்திய அணியின் பெண்கள் அணி மூன்றாவது இடத்தினை வென்று வெண்கலப் பதக்கத்தினையும் வென்றுள்ளது. 

பெண்கள் பிரிவில் டாப் பத்து இடங்களை பெற்ற நாடுகள் 

ரேங்கிங்

நாடு

போட்டிகள்

வெற்றி

சமம்

தோல்வி

01

உக்ரைன்

11

07

04

00

02

ஜார்ஜியா

11

08

02

01

03

இந்தியா

11

08

01

02

04

அமெரிக்கா

11

08

01

02

05

கஜகஸ்தான்

11

08

02

02

06

போலாந்து

11

07

02

02

07

அஜர்பெய்ஜான்

11

07

02

02

08

இந்தியா 2

11

07

02

02

09

புல்காரியா

11

07

02

02

10

ஜெர்மனி

11

08

00

03

 

ஓபன் கேட்டகரியில் வெற்றி பெற்ற முதல் ஐந்து இடங்களைப் பெற்ற நாடுகள்

ரேங்கிங்

நாடுகள்

போட்டிகள்

மேட்ச் பாயிண்ட்ஸ்

01

உஸ்பெஸ்கிஸ்தான்

11

19

02

அர்மேனியா

11

19

03

இந்தியா 2

11

17

04

இந்தியா 1

11

17

05

அமெரிக்கா

11

17

ஓபன் கேட்டகரியில், உஸ்பெஸ்கிஸ்தான் நாடு 19 புள்ளிகளுடன் முதல் இடத்தினை பெற்று தங்கப் பதக்கத்தினையும், 19 புள்ளிகளுடன் அர்மோனியா அணி இரண்டாவது இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினையும்,  இந்தியா2 அணி மூன்றாவது இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினையும் வென்று முதல் மூன்று இடங்களில் உள்ளது. இந்திய அணிகளைப் பொறுத்தவரை பெண்கள் பிரிவிலும், ஓபன் பிரிவிலும் மூன்றாவது இஅடத்தினைப் பெற்றுள்ளது. குறிப்பாக, செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய பெண்கள் அணி பதக்கம் வெல்வது இதுதான் முதல் முறை என்பது கூடுதல் சிறப்பான நிகழ்வாக உள்ளது.