தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டியில் பங்கேற்பதற்கான தேசிய பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தமிழக வீராங்கனைகள் மாரியம்மாள் பாலமுருகன், சந்தியா வேதாச்சலத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.


மாரியம்மால் பாலமுருகன் தமிழ்நாட்டின் சங்ககிரி பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை பாலமுருகன் ஒரு விசைத்தறி தொழிலாளி. இவர் நாமக்கல் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கால்பந்து மீது இருந்த ஆர்வத்தால் இவர் சிறிய வயது முதல் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். 


சந்தியா வேதாச்சலமும் சாஃப் அண்டர் 17ல் விளையாடிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பயிற்சியை முடித்து தேசிய அளவில் தேர்வானால்


கால்பந்துக் கூட்டமைப்பு (South Asian Football Federation-SAFF) என்பது 1997-இல் தொடங்கப்பட்ட கால்பந்து ஆடுகின்ற தெற்காசிய நாடுகளின் கால்பந்துக் கூட்டமைப்பு ஆகும். 


இதன் தொடக்க உறுப்பினர்கள்: இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை. 2000-ஆம் ஆண்டில் பூடான் உறுப்பினராக இணைந்தது.


கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலியில் சாஃப் உறுப்பு நாடுகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் வங்கதேசம் போட்டிகளை ஏற்று நடத்தும் என்று முடிவு எட்டப்பட்டது.


இந்நிலையில் இந்தப் போட்டியின் அண்டர் 19 பிரிவின் 2வது எடிசன் போட்டிகள் விரைவில் நடக்கவுள்ளது. வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடக்கிறது. வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள BSSS முஸ்தபா கமல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
SAFF U-19 பெண்கள் பிரிவு போட்டி கால அட்டவணை:


11 டிசம்பர் 2021 15:00 பூடான் vs இலங்கை


11 டிசம்பர்  2021 19:00 வங்கதேசம் vs நேபாள்


13 டிசம்பர் 2021 15:00 வங்கதேசம் vs பூடான்


13 டிசம்பர்  2021 19:00 இந்தியா vs இலங்கை


15 டிசம்பர்  2021 15:00 டிசம்பர் நேபாள் vs இலங்கை


15 டிசம்பர்  2021 19:00 இந்தியா vs பூட்டான்


17 டிசம்பர்  2021 15:00 வங்கதேசம் vs இந்தியா


17 டிசம்பர் 2021 19:00 நேபாள் vs பூட்டான்


19 டிசம்பர் 2021 15:00 நேபாள் vs இந்தியா


19 டிசம்பர் 2021 19:00 வங்கதேசம் vs இலங்கை


22 டிசம்பர்  2021 18:00 டாப்1 vs டாப் 2