Vastu Tips for Money: வாஸ்து என்பது இந்து மதத்தின் அடிப்படையில் பின்பற்றப்படும்,கட்டிட கலைக்கான ஒரு தொழில்நுட்பமாகும். இந்த வாஸ்துவில் அறிவியலும் கலந்துள்ளதால் இன்று பெரும்பான்மையான மக்கள், அவர்கள் எந்த மதமாக இருந்தாலும், வாஸ்துவை பின்பற்றுகிறார்கள். வாஸ்து முறைப்படி கட்டப்படும் வீடோ அல்லது கடைகளோ அல்லது வியாபார தளங்களோ எவ்வளவு அளவுகளில் இருக்க வேண்டும்.
எந்தெந்த திசையை நோக்கி இருக்க வேண்டும்,அவற்றுக்கு உள்ளே என்ன மாதிரியான பொருட்கள்,என்னென்ன திசையில் இருக்க வேண்டும், என்பதை பற்றி எல்லாம் இந்த வாஸ்து மிக விரிவாக விளக்கி இருக்கிறது. இந்த வாஸ்துபடி கட்டப்படும் வீடோ அல்லது வீட்டுக்கு உள்ளாக கட்டிட அமைப்புகளில் செய்யப்படும் அலங்காரங்களோ நேர்மறை ஆற்றல் மற்றும் வளிமண்டலத்தில் இருந்து நல்ல சக்திகள் நம் வசிக்கும் வீட்டில் கொண்டு வந்து சேர்க்கிறது என்பது இந்து மதத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டும் இன்றி அனுபவரீதியான உண்மையுமாகும்.
நம் அனைவரும் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் நம் வீட்டில் வைத்திருக்கிறோம். நம்மில் சிலர் பணத்தை எங்கு சேமித்து வைக்கிறோம் என்பதில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கலாம். வீடு கட்டும் பொழுது எப்படி வாஸ்து பார்த்து கட்டுகிறோமோ,இதே போலவே பணம் நகை மற்றும் மதிப்புமிக்க பொருட்களை சேர்த்து வைப்பதற்கும் தகுந்த இடமோ அல்லது திசையோ என்ன என்பதைப் பற்றி,வாஸ்துவில் என்ன குறிப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாகவே இருக்கிறார்கள்.
பணமாக இருந்தாலும், நகைகளாக இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் மதிப்புமிக்க சொத்துகளாக இருந்தாலும், வாஸ்து படி உங்கள் பணத்தை எங்கு வைத்திருக்க வேண்டும் என்பதற்கான சில பயனுள்ள குறிப்புகள் இங்கே உள்ளன.
வடக்கு திசையில் வைக்கவும்
வடக்கு திசை என்பது செல்வத்தின் அதிபதியான மற்றும் செல்வங்களின் கடவுளான குபேரின் திசையாக கருதப்படுகிறது. உங்கள் மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் வைத்திருக்கும் பணப்பெட்டி எப்போதும் வடக்கிலே இருக்க வேண்டும்.இது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் உங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்குவதாகவும் வாஸ்துவில் சொல்லப்பட்டிருக்கிறது.
தெற்கு நோக்கி இருப்பது பாதுகாப்பானது அல்ல
பணப்பெட்டியை வடக்கு திசையில் வைக்க வேண்டும் என்றாலும், பணப்பெட்டியின் கதவு தெற்கு நோக்கி இருக்கக்கூடாது.
இந்த வாஸ்துவை பின்பற்றுவது, நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும்.
உங்கள் பணப்பெட்டியை கிழக்கு திசையில் வைப்பது
சில காரணங்களால், உங்கள் பணப்பெட்டியை வடக்கு திசையில் வைக்க முடியாவிட்டால், கிழக்கு திசையில் வைப்பது என்பது சற்றே பாதுகாப்பும்,சிறந்த மாற்று ஏற்பாடு மாகும். கடைகளைப் பொறுத்தவரை காசாளர் தென்மேற்குத் திசையை நோக்கி அமர்ந்திருந்தால், பெட்டகத்தை அவரது இடது புறமாகவும், கிழக்கு நோக்கியிருந்தால், வலது புறமாகவும் வைக்க வேண்டும்.
உங்கள் பெட்டகத்தை வடக்கில் திறப்பது நல்லது. முடிந்தால், தென் திசையை முற்றிலும் தவிர்க்கவும். இது துரதிர்ஷ்டத்தைத் தருகிறது. மேலும் செல்வம் விரைவாக கரைந்து விடும்.
உங்கள் பூஜை அறையில் பணப்பெட்டியை வைக்காதீர்கள்.
வாஸ்து படி, உங்கள் பணத்தை வைக்க இடங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, உங்கள் பூஜை அறையைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் பூஜை அறை,உங்கள் படுக்கையறை அல்லது ஆடை மாற்றும் அறை என உங்கள் பணத்தை வைக்க, இடத்தை முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், படுக்கையறையிலோ அல்லது ஆடை மாற்றும் அறைகளிலோ உள்ள அலமாரிகளில் மேற் சொன்ன திசையை கணக்கிட்டு பணத்தை வைக்கலாம்.
கூடுதல் குறிப்புகள்
1. அசுத்தம் நீங்கி, சுத்தமாக இருக்கும் இடங்களில், பணம் வந்து தங்கும். எனவே உங்கள் பணம் வைக்கும் இடம் எப்போதும் அசுத்தமில்லாமலும், சுத்தமாகவும் மற்றும் ஒழுங்காகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2. உங்கள் பணப்பெட்டி வீட்டில் இருந்தால், அதில் ஒரு வெள்ளி நாணயத்தை வைக்கவும். இது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
3. உங்கள் பணப் பெட்டியில் கோப்புகள் மற்றும் ஆவணங்களுடன் உங்கள் பணத்தை வைத்திருக்க வேண்டாம்.
4. உங்கள் பணப்பெட்டியை ஒருபோதும் காலியாக விடாதீர்கள். அதில் குறைந்தபட்சம் ஒரு ரூபாய் நாணயமாவது இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
5. உங்கள் வீட்டின் கடைசி அல்லது முதல் அறையில் உங்கள் பணப்பெட்டியை வைத்திருப்பதைத் தவிர்க்கவும்.
6. உங்கள் பணப்பெட்டியை ஜன்னல் அல்லது வென்டிலேட்டருக்கு அருகில் வைக்காதீர்கள். இது பணமானது உங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை குறிக்கிறது.
7. வாஸ்து படி உங்கள் பணத்தை எங்கு வைக்க வேண்டும் என்று முடிவு செய்யும் போது, மேற் சொன்ன வாஸ்துபடி குறிப்புகளின் படி சிறப்பான ஒரு இடத்தை தேர்வு செய்து,அதில் உங்கள் பணத்தையும் மதிப்புமிக்க நகைகளையும் மற்றும் மதிப்புமிக்க பொருட்களையும் வைத்திருங்கள்.